புதன்கிழமை, ஜனவரி 15, 2025

16 வருடமாக காக்க வைத்த சுந்தர் சி.. சைலண்டா பார்த்த வேலை

எப்பொழுதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் சி, சில நேரங்களில் ஆக்சன் படங்களை கொடுப்பதிலும் தவறுவதில்லை. இவர் படம் என்றால் ஒரு கமர்சியல் படமாகத்தான் இருக்கும். எல்லாவிதமான ரசிகர்களையும் கவர்வதில் சுந்தர் சி-க்கு நிகர் வேறு எவரும் இல்லை என்று சொல்லலாம்.

இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டும் சுந்தர் சி, தற்போது பத்ரி நாராயணன் இயக்கத்தில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் 24-ஆம் தேதி திரைக்கு வந்தது. அந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை யாரும் எதிர்பாராதவிதமாக கொலைகார சைக்கோ வில்லனாக ஜெய் முதல்முதலாக  ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் .

இப்பொழுது ஏற்கனவே சுந்தர் சி எடுத்து வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை இப்பொழுது எடுத்து முடித்துள்ளார் சுந்தர் சி. இந்த படம் எப்பொழுது எடுத்தார் எப்பொழுது முடித்தார் என்பது எவருக்கும் தெரியவில்லை. சுந்தர் சியின் இந்த படத்திற்காக 16 வருடமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சுந்தர் சி , வைகைப்புயல் வடிவேலு உடன் ஆக்ஷன் கலந்த காமெடி படமான தலைநகரத்தை எடுத்து ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்தார். சுராஜ் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சுந்தர் சி-வடிவேலு உடன் ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்

தலைநகரம் இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி கதாநாயகனாக நடித்திருக்கிறார். சுந்தர் சி-யின் இருட்டு படத்தை இயக்கிய வி.இசட்.துரை தலைநகரம் 2 படத்தை இயக்கியுள்ளார். கடந்தாண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

அத்துடன் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெளியில் தெரியாமல் சைலண்டாக தயாராகியிருக்கும் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போன்றே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

Trending News