வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் சுனிதாவின் நண்பி.. மாஸ் காட்டும் ஆனந்தி ரஞ்சித்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஆள் மாறாட்டம் டாஸ்க் ஏற்கனவே பழைய சீசனங்களில் வந்திருந்தாலும் இந்த சீசனில் கொஞ்சம் வன்மத்தை கக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி சண்டை சச்சரவுகளாக வந்து கொண்டிருக்கிறது. பழைய சீசனங்களில் ரசிக்கும்படியாகவும் ஒருத்தரை போல் ஒருத்தர் நடித்துக் காட்டி அங்கு இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் வெளியே இருந்து பார்ப்பவர்களும் கைதட்டும் அளவிற்கு இருந்தது.

ஆனால் இன்று பெண்கள் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் இது ஒரு சான்ஸ் என்று அவர்களுக்கு பிடிக்காதவர்களை வன்மம் தீர்க்கும் வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் இந்த மாதிரி தான் இருக்கிறார்கள் என்று மொத்தத்தையும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவிற்கு நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

இது பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அப்படியே கடுப்பாகவும் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஒருத்தரை மாற்றி ஒருத்தர் மட்டம் தட்டி வருகிறார்கள். அதிலும் சுனிதா, சௌந்தர்யா, ஜாக்லின், அன்சிதா இவர்கள் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி நக்கல் அடித்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் இதுவரை விஷப்பாட்டிலாகவும், நாரதர் வேலையும் பார்த்துட்டு வந்த ஆனந்தி இந்த வாரத்தில் அவருக்கான விளையாட்டை ஹைலைட் பண்ணி காட்டும் வகையில் சௌந்தர்யா மாதிரி நடித்து வருவது பார்க்கும் மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதை மாதிரி ரஞ்சித், ஜெஃப்ரியாக மாறி பண்ணும் ரகளைகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கிறது.

ஆக மொத்தத்தில் ஆனந்தி மற்றும் ரஞ்சித் இந்த வாரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு சௌந்தர்யா மற்றும் ஜெஃப்ரியே வைத்து மாஸ் காட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆள்மாறாட்டம் பண்ணி முடித்த பிறகு அடுத்த கேம் என்னவென்றால் பிக் பாஸ், போட்டியாளர்களுக்கு மூன்று நிமிடம் கொடுக்கிறது. அந்த மூன்று நிமிடத்தில் யார் போல் வேஷம் போட்டு இருக்கிறார்களோ அவர்கள் போல நடித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் சௌந்தர்யா, சுனிதாவை வச்சு செய்யும் அளவிற்கு எல்லா வன்மத்தையும் கக்கி சுனிதா எதுவும் பேச முடியாத அளவிற்கு நடிப்பால் பொளந்து கட்டி வருகிறார். இவருடன் சேர்ந்து ஜாக்லின், அன்சிதா மாதிரி சுனிதாவின் பக்கத்தில் இருந்து பேசுவது மட்டும் தான் வேலை என்பதற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் சவுந்தர்யாவுக்கு ஹைலைட்டாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சுனிதாவை வரவேற்கும் மக்களுக்கு கொஞ்சம் கடுப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது.

இப்படி போட்டிகள் எல்லை மீறிக்கொண்டு வன்மமாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் யார் யார் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை இந்த வார கடைசியில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டு நிச்சயம் அதற்கான பதிலை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்றால் சுனிதாவின் நெருங்கிய நண்பராக உள்ளே இருக்கும் அன்சிதா தான்.

Trending News