திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சன்னி லியோன், ஜி பி முத்து நடிக்கும் படத்தின் வைரல் போஸ்டர்.. தலைவரே அது பத்திரம் என கலாய்த்த ரசிகர்கள்

சன்னி லியோன் என்ற பெயரை தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாவார். காரணம் இவர் ஆபாசப்பட நடிகை என்பதே. இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். என்னதான் ஆபாச படங்களில் நடித்து வந்தாலும், சமூக சேவையில் சன்னி லியோனை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த வகையில் சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் சமீபகாலமாக ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்து சில நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தற்போது தமிழ் சினிமா பக்கம் தன் கவனத்தைத் திசைதிருப்பி உள்ள சன்னி லியோன் ஷீரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் யுவன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் சன்னி லியோன் ஒப்பந்தமாகியிருந்தார் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. திகில் நிறைந்த காமெடி படமான இப்படத்தில் சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் உடன் இணைந்து நடிக்கின்றனர்.

ஜாவிட் இசையமைக்கும் இப்படத்தில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி பி முத்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இவர் தவிர ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். சன்னி லியோன் இப்படம் மட்டுமல்லாமல் வேறு சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

OMG-poster
OMG-poster

இப்படத்தின் டைட்டில் லுக் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. சசிகுமார் மற்றும் வீரசக்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஓ மை கோஸ்ட்’ என டைட்டில் வைத்துள்ளனர். தற்போது இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. போஸ்டரை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் தலைவரே அது பத்திரம் என்று மறைமுகமாக கலாய்த்து வருகின்றனர்.

Trending News