வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரமோஷன் செய்தும் அடிமாட்டு விலைக்கு போன படம்.. உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் சன்னி லியோன்

பாலிவுட் திரை உலகில் வெகு பிரபலமாக இருக்கும் சன்னி லியோன் தற்போது கோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கவர்ச்சி புயலாக ரசிகர்களை கிறங்கடித்த இவர் தமிழில் வீரமாதேவி என்னும் வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வந்தார். அந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் வைரலான நிலையில் இப்படம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அந்த திரைப்படத்தை யுவன் இயக்கியுள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள அந்த திரைப்படத்தை தான் சன்னி லியோன் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.

Also read: அஜித்தை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சன்னி லியோன்.. துணிவு டீமுக்கு ஷாக் கொடுத்த ஓட்டிங் ரிப்போர்ட்

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அழகாக புடவையில் வந்திருந்த சன்னி லியோனை பார்த்து பலரும் வாயடைத்து போனார்கள். அது மட்டுமல்லாமல் அந்த படம் எப்போது வெளிவரும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இவ்வாறு இப்படம் ஒரு பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில் படத்தின் பிசினஸ் எதிர்பார்த்தபடி இல்லையாம்.

ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் சன்னி லியோனுக்கு இப்போது வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கி விட்டது. அதனால் கோலிவுட்டில் ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுத்து கல்லா கட்டலாம் என்று எதிர்பார்த்த அவருக்கு இப்போது ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. ஏனென்றால் இப்படத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லையாம்.

Also read: உன் பொண்டாட்டி போடுற டிரெஸ்ஸை பாரு.. சன்னி லியோனால் சதீஷை வெளுத்து வாங்கிய இயக்குனர்

இப்போது தமிழ் திரையுலகில் பேய் படங்கள் வெளிவருவது அதிகமாகிவிட்டது. மாதத்திற்கு இரண்டு படங்களாவது பயங்கரம், திகில் என்ற பெயரில் மொக்கை காமெடியுடன் வெளி வருகிறது. அதனாலயே இப்போது அது போன்ற படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. அதையும் மீறி வெளிவரும் படங்களும் தோல்வியை தழுவுகிறது.

அந்த வகையில் இப்போது ஓ மை கோஸ்ட் திரைப்படமும் அடிமாட்டு விலைக்கு தான் விற்கப்பட்டிருக்கிறது. எப்படியும் படத்தை நன்றாக பிசினஸ் செய்து விட வேண்டும் என்று எதிர்பார்த்த சன்னிலியோன் தற்போது உச்சகட்ட பதட்டத்தில் இருக்கிறாராம். மேலும் கிடைத்த வரையில் லாபம் என்று இப்போது படம் வெளியாக தயாராக இருக்கிறது. ஆனால் வருட கடைசியில் வெளியானால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்ற பயம் பட குழுவினருக்கே இருக்கிறதாம்.

Also read: சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்

Trending News