பலான வீடியோக்கள் எத்தனை வந்தாலும் அதில் இளசுகள் மனதில் நிற்கும் அளவிற்கு ரசிகர்களை கொண்ட நடிகை சம்பாதித்த நடிகை என்றால் அது சன்னி லியோன் மட்டுமே. பலான எனப்படும் 18+ படங்களில் நடிப்பதை நிறுத்திய சன்னிக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது பாலிவுட் என்றால் அது மிகையாகாது.
இப்படியாக பாலிவுட் படங்களில் துவங்கிய சன்னி வடகறி படத்திற்காக தமிழில் ஒரு ஐட்டம் டான்சும் போட்டார். அதனோடு முடிந்துவிட்டபதா சங்கதி என்றால் சில ஆண்டுகளுக்கு பிறகு சன்னிக்கு அடித்தது ஜாக்பாட் ஐட்டம் டான்சரில் இருந்து படத்தின் நாயகியாக உருவெடுத்திருக்கிறார்.
சதீஷ், தம்பி ராமையா, சீரியல் நடிகை ஒருவர், மேலும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இணையும் படத்தில் நாயகியாகியிருக்கிறார் சன்னி. இதுகுறித்து அவர் பேசியதில் நடிகர் தம்பி ராமையாவை தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்து விட்டதாம்.
அவருடன் நெருங்கி பழகியதில் அங்கே ஆங்கிலம் தடைபோடுவதாகவும், அதற்காகவே கொஞ்சம் தமிழ் வார்த்தைகளை அவரிடம் கடனாய் பெற்றதாகவும் கூறினார்.
மேலும் தென்னிந்திய மொழிகளில் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை கற்பதில் தனக்கு அதிக விருப்பம் உள்ளதாகவும் இதனால் சில தென்னிந்திய பட வாய்ப்புகள் கிடைத்தால் சந்தோஷம் இரட்டிப்பாகும் என்றும் கூறினார்.
![thambi ramaiah sunny leone](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/thambi-ramaya-sunny-leone.jpg)
இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் உட்பட படக்குழுவின் அத்தனை நபர்களும் தன்னை ஒரு உறவினர் போல டீல் செய்வதாகவும் மனம்வெகுண்டுகூறியுள்ளார்.