வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சன்னி லியோன் படத்தில் நடிக்கும் டிக் டாக் பிரபலம்.. அதிர்ச்சியில் இருக்கும் பிரபலங்கள்

தமிழகத்தில் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. அவருக்கு பெரிதாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. இவர் பெயரை சொன்னாலே போதும். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான சோசியல் மீடியா செலிபிரிட்டி தான் இந்த ஜி.பி.முத்து.

டிக் டாக் செயலியில் பிஸியாக வீடியோ பதிவிட்டு வந்த ஜி.பி.முத்து, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். மிகவும் குறுகிய நேரத்திலேயே இவரது சேனலை அதிகமானோர் பின்தொடர தொடங்கினார். தற்போது ஏறக்குறைய 9 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜி.பி.முத்துவை பின் தொடர்கின்றனர்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு இவர் ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம். சமீபகாலமாக ஜி.பி.முத்து இல்லாமல் எந்த ஒரு மீம்ஸ்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வருவதில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் ஜி. பி. முத்து.

gp-muthu-cinemapettai
gp-muthu-cinemapettai

இந்நிலையில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் தவிர நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Trending News