கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புதுச்சேரி மாநில அரசு அதுபோன்ற எந்த தடையும் அறிவிக்கவில்லை. இதனால் புதுவை இளைஞர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியானது.
அதாவது கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புதுவையில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதுதான் அந்த அறிவிப்பு. அதன்படி புதுவையில் உள்ள பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகை இதில் சன்னி லியோன் பங்கேற்பார் என விளம்பரங்கள் வெளியானதோடு சன்னி லியோனை வரவேற்று புதுவையில் ஆங்காங்கே பேனர்களும் வைக்கப்பட்டன. ஆனால் நிகழ்ச்சிக்கு கட்டணமாக சுமார் 2000 முதல் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
சன்னி லியோனை பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்களும் தாராளமாக டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. ஆனால் தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் 100க்கும் குறைவான ரசிகர்களே பங்கேற்றனர். மேலும் சன்னி பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெறும் 2 மணி நேரம் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் எதிர்ப்பு காரணமாக சன்னி லியோன் இரவோடு இரவாக புதுச்சேரியை விட்டு சென்று விட்டாராம். இதனால் சன்னி லியோன் பங்கேற்பார் என நினைத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஆடி பாடி மகிழ்விப்பார் என்று ஆசை காட்டி சன்னி லியோன் ஏமாற்றியதால் இளைஞர்கள் சோகத்தில் உள்ளனர்.