திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இவருக்கு சன்னி லியோன் ஜோடியா? அதிர்ச்சியான சினிமா வட்டாரம்

ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்து பேமஸாகி இருந்தாலும் தற்போது இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சன்னி லியோன்.

அதிலும் குறிப்பாக ஹிந்தி சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் கவர்ச்சியான வேடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு சன்னிலியோனுக்கு சமீபகாலமாக நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறதாம்.

sunny-leone-cinemapettai-01
sunny-leone-cinemapettai-01

தமிழிலும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, கெஸ்ட் ரோல் என இந்திய சினிமாவில் அவர் கால் பதிக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

இந்நிலையில் அடுத்ததாக சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க உள்ளார். ஸ்ரீசாந்த் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

sreesanth-cinemapettai
sreesanth-cinemapettai

பத்து வருடங்களாக இருந்த தடைகளும் சமீபத்தில் நீங்கி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக லோக்கல் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால் ஸ்ரீசாந்தை எந்த ஒரு ஐபிஎல் நிறுவனமும் ஏலத்தில் எடுக்க தயாராக இல்லை.

இந்த பத்து வருடத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தியில் படங்களிலும் நடிக்க தொடங்கினார் ஸ்ரீசாந்த். அந்த வகையில் அடுத்ததாக சிபிஐ அதிகாரி வேடத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News