செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பலான காட்சிகளால் கொட்டிய பண மழை.. வியக்க வைத்த சன்னி லியோனின் சொத்து மதிப்பு

Sunny Leone: அன்றைய காலத்தில் எப்படி சில்க் ஸ்மிதா இளசுகளின் கனவு கன்னியாக இருந்தாரோ அப்படித்தான் இப்போது சன்னி லியோன் இருக்கிறார். பலான படங்களில் ஏடாகூடமாக நடித்து வந்த இவர் ஹிந்தி திரை உலகில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலமானார். அதிலும் சமீபத்தில் இவர் தமிழில் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திற்கு பரவலான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதை தொடர்ந்து வீரமாதேவி என்ற வரலாற்று படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

Also read: சன்னி லியோனின் நடத்தையை விமர்சித்த ரோஜா.. தக்க பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த சம்பவம்

அது மட்டுமல்லாமல் இன்னும் பல படங்கள் இவர் கைவசம் இருக்கிறது. இப்படி பிட்டு பட நடிகை என்று தனக்கு இருந்த அடையாளத்தை மாற்றிக் கொண்டு நடித்து வரும் இவருடைய சொத்து மதிப்பு என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது தற்போது இவருடைய சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவருக்கு ஒரு பிரம்மாண்ட பங்களாவும் இருக்கிறது. அதேபோன்று மும்பையிலும் ஒரு வீடு இருக்கிறது. இப்படி பலான காட்சிகளில் நடித்தே கோடிக்கணக்கில் சொத்துக்களை இவர் வாங்கிப் போட்டு இருக்கிறார்.

Also read: வசீகரத்தால் கைவசப்படுத்திய சன்னி லியோனின் 4 படங்கள்.. ஆட்டத்தைப் பார்க்க ஹவுஸ்புல்லான திரையரங்கு

அது மட்டுமின்றி இவர் சன் சிட்டி மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு ஓவியம் வரைவது, எழுதுவது போன்ற பல திறமைகள் இருக்கிறது. இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் இந்தியா வம்சாவளி குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார். இப்படி பல முகம் கொண்டவராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு பலரையும் வாயடைக்க செய்யும் வகையில் இருக்கிறது.

Also read: வசமாய் மாட்டி கொண்ட சன்னி லியோன்.. விடாமல் துரத்திய வழக்கு

Trending News