சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சன் பிக்சர்ஸ் கலாநிதி ஆரம்பித்து வைத்த புது கலாச்சாரம்.. சோலியை முடித்த ரஜினி

Sunpictures and Rajini’s Enthiran who emptied Tamil cinema: காலத்திற்கு ஏற்ப தமிழ் சினிமா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது என்றாலும் பழமையை ஓரங்கட்டி வரும் மாற்றங்கள் ஆக்கத்திற்கு அல்ல! அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது. வருடத்திற்கு வருடம் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்தாலும் நம் சிந்தனையில் சிறகடித்து நீடித்து இருப்பது என்னவோ ஒரு சில படங்களே!

இன்றைய சூழலில் படங்கள் வெளி வருவதும் தெரியவில்லை! வந்த வேகத்தில் போவதும் தெரியவில்லை! ரசிகனின் நினைவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த படங்களின் நினைவுகள் நீங்காமல் இருக்க, கடந்த ஆண்டு வெளிவந்த படங்கள் மறந்து போவது ஏன்?

80ஸ் மற்றும் 90ஸ்களில் வெளிவந்த படங்கள் 100 நாட்கள் 200 நாட்கள் என வெற்றி விழா கொண்டாடிய நிலையில் இன்று நாலு நாட்களைக் கடந்தாலே படம் வெற்றி என கொண்டாடுவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியம் அல்ல! வலியோரின் ஆதிக்கமே. இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது யார்?

பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், முன்னணி நடிகர்கள், அதிக திரையரங்கு உரிமை இவையே இன்றைய படத்தின் வெற்றி பார்முலாவாக மாறி உள்ளது. இந்த வெற்றி தமிழ் சினிமாவை அழிக்க போவது என்று உணராமல் போவது தான் கொடுமையிலும் கொடுமை. இதற்கு முதல் அச்சாரத்தை போட்டது 2010 ஆண்டு வெளிவந்து மாபெரும் சாதனைகளை உள்ளடக்கிய எந்திரன் திரைப்படம்தான்.

Also read: ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் 60% ஓட்டு விஜய்க்கு தான்.. அடித்து சொல்லும் அரசியல் சாணக்கியன் கணிப்பு

சன் பிக்சர்ஸ் சார்பில் சங்கர் இயக்கத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த எந்திரன்,100 கோடி பட்ஜெட்டை தாண்டிய முதல் தமிழ் திரைப்படம். அதிக பட்ஜெட் என்ற காரணத்திற்காகவே அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்தது. மூன்று மொழிகளில் வெளியான எந்திரன் உலகம் முழுவதும் 2250 திரையரங்குகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 500 திரையரங்குகளிலும் திரையிடப் பட்டது.

படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பினால் ஒரே வாரத்தில் படம் பார்க்க துடித்த மக்கள் அனைவரும் பார்த்து, வசூலிலும் தன்னிறைவு பெற்றாகிவிட்டது. இந்த கலாச்சாரத்தினால் இதற்கு அடுத்அடுத்து வந்த படங்களும் இதே பார்முலாவை பின்பற்ற படங்கள் மொத்தமாக ஆறு அல்லது ஏழு நாட்களிலேயே ஓரம் கட்டப்படும் நிலையும் வந்தது.

மற்றொரு காரணமாக திரையரங்குகளில் அதிகரித்த டிக்கெட் விலைகளின் விலையேற்றமும், மேலும் படம் வெளிவந்த சிலநாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் ஆவதும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு தடையாகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Also read: சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்

Trending News