சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த பல இயக்குனர்கள் தற்போது சீரியல்களை இயக்கி கொண்டிருக்கும் நிலையில் சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கும் காலகட்டம் இதுபோல.
அதில் ஏற்கனவே வெற்றி கண்டவர் தான் திருமுருகன். சன் டிவியில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற பல வெற்றி சீரியல்களைப் கொடுத்துள்ளார். இவர் சீரியலில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் இரண்டு படங்கள் இயக்கியுள்ளார்.
நடிகர் பரத் மற்றும் கோபிகா நடிப்பில் திருமுருகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் எம் மகன். முதலில் எம்டன் மகன் என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் எம் மகன் என்ற பெயரில் வெளியானது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த இந்த படம் செம வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இதே கூட்டணியில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படம் வெளியானது. ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த இரண்டு படத்திலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அல்டிமேட்டாக இருந்தன.
இதனால் மீண்டும் சீரியல் இயக்க சென்ற திருமுருகன் மீண்டும் பக்காவான குடும்ப கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். இந்த படத்தை எம் மகன் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அஜித்தை வைத்து விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த அதே நிறுவனம் தான்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே திருமுருகன் இயக்கிய பல சீரியல்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பிரபல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் தயாரிப்பு நிறுவனம். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த திருமுருகனின் சீரியல் நிறுத்தப்பட்டிருக்கும் இது தான் காரணம் என்கிறார்கள்.