திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் டிவியை சமாளிக்க முடியாத சன் டிவி.. பழைய 5 சூப்பர் ஹிட் சீரியல்களை தூசி தட்டும் சம்பவம்

நாளுக்கு நாள் சன் டிவியின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. அவர்கள் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளும் தோல்வியைக் கொடுத்து வருகின்றனர். இதனால் விரைவில் விஜய் டிவியிடம் நம்பர் ஒன் இடத்தை பறி கொடுத்து விடுவோம் என்ற கவலை அதிகமாக இருக்கிறதாம்.

ஆரம்பத்திலிருந்தே விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை பலமாக பயன்படுத்தி வந்தது. தரமான தொகுப்பாளர்கள், ரசிக்க வைக்கும் நிகழ்ச்சி என ரியாலிட்டி ஷோக்களின் கிங் என விஜய் டிவி பெயரெடுத்தது. சமீபகாலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஆகியவை ரசிகர்கள் மற்றும் பெண்களின் பேராதரவை பெற்று வருகிறது.

தற்போது போட்டி என்று பார்த்தால் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய இருவருக்கும் தான். சன்டிவி கடந்த சில மாதங்களாக லிஸ்டில் இல்லாமல் போய்விட்டது. பார்த்து பார்த்து சலித்து போன அதே கதையம்சம் கொண்ட சீரியல்கள், அல்லது மற்றவர்களை பார்த்து காப்பியடித்து எடுக்கப்பட்ட சீரியல்கள் என போரடிக்கும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் ஊரடங்கு சமயத்தில் சித்தி சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால் தான் சித்தி 2 சீரியல் உருவானது குறிப்பிடத்தக்கது. ஆனால் சித்தி என்றாலே ஞாபகத்துக்கு வரும் ராதிகாவே இல்லையென்றால் அந்த சீரியலில் ஒன்றுமில்லை என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன.

தற்போது அதே போல் உதிரிப் பூக்கள், வம்சம், செல்வி, அத்திப்பூக்கள் மற்றும் நந்தினி போன்று 5 சூப்பர் ஹிட் சீரியல்களை திங்கள் முதல் சனி வரை காலை 9 மணியிலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் சன் டிவியிடம் சரக்கு இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதனை அறிந்து கொண்ட மற்ற சேனல்கள் தங்களுடைய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

suntv-superhit-serials-retelecast
suntv-superhit-serials-retelecast

அப்பனுக்கு அப்பன் எப்போதும் இருப்பான்!

Trending News