புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதியை வைத்து 100வது படத்தை எடுத்தே தீருவேன்.. அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் தான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்பி சவுத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது 100 வது படத்தை யாரை வைத்து தயாரிக்க உள்ளோம் என்பதை கூறியுள்ளார்.

சூரியவம்சம், ஷாஜகான், பூவே உனக்காக, ஜில்லா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ். நடிகர் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர்பி சவுத்ரி இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

ஆர்பி சவுத்ரி நாங்கள் பல குடும்ப பாங்கான படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் இன்றைய ரசிகர்கள் குடும்ப பாங்கான படங்களை எதிர்பார்ப்பது இல்லை அதனால் நாங்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு. தற்போது இளைஞர்களுக்கு பிடிக்க கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் என கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் குட் பிலிம்ஸ் 90வது படத்தை தனது மகனான ஜித்தன் ரமேசும், அருள்நிதியும் இணைந்து நடித்துள்ளதாகவும். இந்த படம் தவிர மேலும் இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தை தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாராவை வைத்து நாங்கள் 93வது படமாக தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்க கிட்டத்தட்ட 93 படங்களை தயாரித்துள்ளோம் விரைவில் விஜயை வைத்து 100வது திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாக ஆர்பி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நாங்கள் விஜயை வைத்து கிட்டத்தட்ட 6 மாபெரும் வெற்றி படங்களை தயாரித்து கொடுத்து உள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

thalapathy-rb-choudary
thalapathy-rb-choudary

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் தேனாண்டாள் பிலிம்ஸ் 100வது திரைப்படம், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் விஜய்யை வைத்து 100வது படத்தை தயாரிக்க திட்டம் போட்டு உள்ளார்கள்.

Trending News