புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மிஸ் பண்ண கூடாத 6 த்ரில்லர் தமிழ் படங்கள்.. முதல்ல அந்த படத்த பாருங்க

தமிழ்சினிமாவில் க்ரைம், திரில்லர் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பிரபலமான இயக்குனர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் படைப்பில் வெளிவந்து இன்றளவும் ரசிக்கக்கூடிய படங்களின் வரிசையாக பார்க்கலாம்.

யுத்தம் செய்:

yutham sei
yutham sei

2011ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் யுத்தம் செய். இந்த படத்தில் சேரனின் நடிப்பு , மிஸ்கின் இயக்கம் பெரிதாகப் பேசப்பட்டது. சேரனுடன் சேர்ந்து தீபா ஷா, Y G மகேந்திரன், லட்சுமிராமகிருஷ்ணன், சிருஷ்டி டாங்கே, இனியா போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:

onayum aatukuttiyum
onayum aatukuttiyum

2013ஆம் ஆண்டு வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் மிஷ்கினின் பிரம்மாண்ட படைப்பில் ஒன்று என்றே கூறலாம். இந்த படத்தில் மிஸ்கினுடன் சேர்ந்து ஸ்ரீ நடித்திருப்பார். இவர் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர். இளையராஜாவின் இசை மிகவும் முக்கியமாக பேசப்பட்டது, ஒரு பார்வையற்ற குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மிஷ்கின் போராடும் ஒரு கதைக்களம் மிகவும் சுவாரசியமாக அமைத்திருப்பார்.

துருவங்கள் பதினாரு:

dhuruvangal pathinaaru
dhuruvangal pathinaaru

கார்த்திக் நரேன் இயக்கத்தில், Jakes Bejoy இசையில் வெளிவந்தது துருவங்கள் பதினாறு. ரகுமான், பிரகாஷ் விஜயராகவன், அஸ்வின்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட்டான படம். 2016-ல் தமிழில் வெளிவந்தது, மீண்டும் கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு ரீமிக் செய்யப்பட்டது.

தனி ஒருவன்:

thani oruvan

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமியின் பிரம்மாண்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் தனி ஒருவன். கக்ரைம், திரில்லர் பட வரிசையில் முன்னிலையில் இருக்கிறது என்றே கூறலாம். இசையில் ஹிப்ஹாப் தமிழாக்கு நல்ல வரவேற்பை வாங்கி கொடுத்தது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார், கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 105 கோடி வரை வசூல் செய்ததை, மிகப்பெரிய சாதனையாக தமிழ்சினிமாவில் பேசப்பட்டது.

குற்றம் 23:

kuttram23
kuttram23

அறிவழகன் வெங்கடசலம் இயக்கத்தில், அருண் விஜய், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்தது குற்றம் 23. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் மருத்துவத்தில் நடக்கும் அநியாயங்களை வெளிக்கொண்டுவரும் விதமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 23 குரோமோசோம்கள் உருவாகும் பிறப்பை ஆர்டிபிசியலாக உருவாக்கும் இந்த படத்தின் கதையை ரசிகர்கள் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

விசாரணை:

visaranai

தனுஷின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்தது விசாரணை. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். 1.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் 13 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் நான்கு கைதிகளை போலீஸ் விசாரணையின் மூலம் என்கவுண்டரில் கொள்வது போன்ற உண்மையான கதையை மையமாக எடுக்கப்பட்ட படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Trending News