வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

டார்க் காமெடியில் பட்டையை கிளப்பிய 7 படங்கள்.. விஜய் சேதுபதி முதல் சிவகார்த்திகேயன் வரை

தமிழ் சினிமாவில் கருப்பு நகைச்சுவை படங்களில் நடிக்க சில நடிகர்கள் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சந்தேகம்தான். ஆனால் தற்போது வரும் இருண்ட நகைச்சுவை படங்கள் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் கதைக்களத்துடன் வருகிறது. இவ்வாறு ரசிகர்களுக்குப் பிடித்த கருப்பு நகைச்சுவை படங்களை பார்க்கலாம்.

சூது கவ்வும் : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர். கடத்தலை மையமாக கொண்ட இப்படத்தில் அரசியல்வாதி மகனான கருணாகரனை கடத்துகிறார்கள். பின்பு கடத்தல்காரர்கள் கருணாகரன் உடன் சேர்ந்து அவரது தந்தையின் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்.

ஜில் ஜங் ஜக் : சித்தார்த் நடிப்பில் 2016 இல் வெளியான திரைப்படம் ஜில் ஜங் ஜக். சித்தார்த்துடன் அவினாஷ் ரகுதேவன், சனந்த் ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். கோகோயின் பெயிண்ட் செய்யப்பட்ட கார் கடத்தலை கருப்பொருளாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜல் ஜங் மற்றும் ஜாக் மூவரும் இந்த காரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கோகோயின் காரை இழக்கிறார்கள்.

வா குவாட்டர் கட்டிங் : சிவா, எஸ்பிபி சரண் நடிப்பில் 2010ல் வெளியான திரைப்படம் வா குவாட்டர் கட்டிங். சிவா வேலைக்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்லவிருக்கிறார். அதற்கு முந்தைய நாள் மது அருந்த நினைக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் காரணமாக மதுபானங்கள் வாங்குவது கடினமாக இருக்கிறது. இறுதியில் அவர்கள் இருவரும் குவாட்டர் கட்டிங் பெற்றார்களா என்பதே வா குவாட்டர் கட்டிங் படமாகும்.

மும்பை எக்ஸ்பிரஸ் : கமல்ஹாசன், பசுபதி, கோவை சரளா, வையாபுரி ஆகியோர் நடிப்பில் 2005ல் வெளியான திரைப்படம் மும்பை எக்ஸ்பிரஸ். பணத்திற்காக ஒரு பணக்காரனின் மகனைக் கடத்த நினைக்கும் கும்பல் தலைவன் பசுபதி. கிரேன் ஆபரேட்டர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது மைத்துனர் கமல் கயிறு கட்டிக் கொள்கிறார். இப்படத்தில் கமல் காது கேளாதவராக நடித்திருந்தார். மேலும், பசுபதி எப்படி கமலுடன் திட்டமிட்டு செயல்படுத்துகிறார் என்பதை மும்பை எக்ஸ்பிரஸ்.

கோலமாவு கோகிலா : நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நயன்தாராவின் தாய் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். தன் தாயின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படும்போது, கடத்தல்காரர்களுடன் குடும்பத்துடன் சேர்ந்து  கடத்தலில் ஈடுபடுகிறார் நயன்தாரா.

சதுரங்க வேட்டை : நட்டி நட்ராஜ் மற்றும் இஷாரா நாயர் நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை. உழைத்து சம்பாதிப்பதை விட கொஞ்சம் உட்கார்ந்த இடத்திலேயே கோடிகளையும், லட்சங்களையும் அள்ள வேண்டும் எனத் துடிக்கும் சில புத்திசாலித்தனமான மோசடிக்காரர்கள் பற்றி வெளிச்சம் போட்டு காட்டிய படம்.

டாக்டர் : சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் 2021 இல் வெளியான திரைப்படம் டாக்டர். ஒரு ராணுவ மருத்துவர், குழந்தைகளை கடத்தும் கும்பலிடம் இருந்து குழந்தைகளை மீட்க முடிகிறதா என்பதே டாக்டர் கதை. இப்படத்தில் பல முக்கியமான சீரியஸான காட்சிகளில் கூட காமெடி விஷயங்களால் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார்.

Trending News