திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி ரிஜெக்ட் செய்ததால் காணாமல் போன சூப்பர் ஹிட் இயக்குனர்.. 100 கோடி வசூல் செஞ்சும் வாய்ப்பே இல்ல ராஜா

வயசானாலும் ஸ்டைல் இன்னும் குறையவே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ரஜினிகாந்த் தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அவ்வாறு இருக்கையில் ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனருக்கு ரஜினி வாய்ப்பு தருவதாக கூறி அதன்பின் அதை ட்ராப் செய்ததால் ஏற்பட்ட விளைவை சுட்டிக்காட்டும் விதமாக இச்செய்தி இருந்து வருகிறது.

2022ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் தான் டான். இப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார். இவர் பிரபல இயக்குனரான அட்லி இடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் மேற்கொண்ட இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்று தந்தது.

Also Read: ரஜினியின் மூத்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு நிலைமையா.. வெளிநாட்டில் மெக்கானிக்காக மாறிய சோகம்

ஆனாலும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்க வில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள் எல்லாம் தற்பொழுது பிசியாக இருப்பதால், அக்கட தேசம் சென்று அங்கு ஹீரோக்களை புக் செய்ய நினைத்த இவருக்கு அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏனென்றால் இவர்களை விட அவர்கள் ரொம்பவே பிஸியாக இருப்பதால் இவரின் கதையை கேட்டு யாரும் கால்ஷீட் கொடுக்க முன்வர வில்லையாம். தமிழில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து நல்ல விமர்சனங்களை பெற்ற இவருக்கா இந்த நிலைமை என்று கேட்பவர்களை வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது.

Also Read: ரஜினியை அடிக்கடி சொல்லும்படி சரத்பாபு கேட்ட டயலாக்.. சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டிய கேரக்டர் ஆச்சே

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கையில் இவரின் டான் படத்திற்கு பிறகு ரஜினி இவரை அழைத்து படம் பண்ணலாமா என கேட்டு இருக்கிறார். அதன்பின் சில காரணங்களால் இவரின் கதையை நிராகரித்துள்ளார். அதனால் அந்த பிளானும் டிராப் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற காரணங்களால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இன்றி சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார் சிபி சக்கரவர்த்தி. மேலும் குறிப்பாக ரஜினி இவர் படத்தை ரிஜெக்ட் செய்ததால் இது போன்ற நிலைமைக்கு ஆளாகியதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. இத்தகைய சூழலில் இருந்து இவர் மீண்டு படம் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு பெரிய கும்பிடா போட்ட 5 இயக்குனர்கள்.. உச்சாணி கொம்பை வளைத்த வெங்கட் பிரபு

Trending News