புதன்கிழமை, நவம்பர் 20, 2024

இரண்டே படங்களில் தமிழ் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்த வில்லன்.. ரஜினிக்கே வில்லனா சும்மாவா

இயக்குனர், நடிகர், பாடகர், என பன்முகத்திறமை கொண்டவர் தான் நானா படேகர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர், இவருடைய முழுப்பெயர் பெயர் விஸ்வநாத் படேகர். இவர் பாலிவுட் படமான கமான் படத்தில் அறிமுகமானார்.

இவர் ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மராத்தியில் இவர் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நானா பட்டேக்கர் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பின்பு அதிலிருந்து விலகுவது நானாவிற்கு வழக்கமான ஒன்று. ஏனென்றால் தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் மதிப்பு குறைந்தாலோ அல்லது கதை மாற்றப்பட்டாலும் அதிலிருந்து விலகிவிடுவார். அதனால் இயக்குனர்கள் முன்னதாகவே திரைப்படத்தின் கதையை அவரிடம் சொல்ல வேண்டுமாம்.

நானா பட்டேக்கர் அர்ஜுன் நடிப்பில் வெளியான பொம்மலாட்டம் படத்தில் இயக்குனராக நடித்திருந்தார். அதன்பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பலரும் பாராட்டு அளவுக்கு இருந்தது.

நானா பட்டேக்கர் நிஜவாழ்வில் பிறருக்கு உதவும் மனம் உடையவர். இவர் மிகவும் எளிமையாக வாழ்பவர். வறுமையால் வாடும் விவசாயிகளுக்கு தனது வருமானத்தின் பெரும்பகுதியை அளித்து உதவி செய்து வருகிறார்.

இவர் தமிழில் நடித்த பொம்மலாட்டம் மற்றும் காலா இரண்டு படமுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் இயக்குனர்கள் தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க நானாவை தேர்ந்தெடுப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News