வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அரங்கத்தையே அதிர விடும் சூப்பர் சிங்கர் செமி பைனல்.. ஜோடியாக வந்துள்ள சிறப்பு விருந்தினர்!

விஜய் தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூனியர் சீனியர் என இரண்டு விதங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் சீனியர் சூப்பர் சிங்கர் ஏழு சீசன்களை கடந்து தற்போது 8வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த எட்டாவது சீசனில் இறுதிப்போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி என்பதன் அடிப்படையில் இன்னும் இரண்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் அனு, பரத், முத்துசிற்பி, அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகியவர்களே அந்த செமி பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள். இதில் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய 2 பேரும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் எப்படியாவது இறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த ஆறு போட்டியாளர்களும் செமி பைனல் சுற்றி மோத உள்ளனர். மேலும் பைனல் போட்டியை பிரம்மாண்டமாக நடத்த சூப்பர் சிங்கர் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே,பிரபல நடிகர் ஜோடியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

super-singar-8
super-singer-8

இந்த செமி பைனல் போட்டிக்கு பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி வருகை தந்துள்ளார். இவர் வரும் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதே திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மாதுரி ஜெயின். இவரும் நடிகர் ஆதியும் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர். அதற்காக தற்போது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

எனவே இந்த சூப்பர் சிங்கர் செமி பைனல் நிகழ்ச்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து நபர் பைனல் லிஸ்டில் இடம் பெற்று டைட்டில் வெல்லும் இறுதிக்கட்ட போட்டியில் மோதுவார்கள் என்பதால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Trending News