ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

எதுவுமே செட் ஆக மாட்டேங்குதே.. பயங்கர அப்செட்டில் இருக்கும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி எந்த மாதிரியான கதையை தேர்வு செய்து நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்ற தகவலும் ஊடகங்களில் வெளியானது.

இருப்பினும் ரஜினிகாந்த் இன்னும் எந்த கதையும் முடிவு செய்யவில்லை. அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ரஜினிக்கு அது போதுமானதாக இல்லை. அவர் சந்திரமுகி திரைப்படம் போன்ற ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் சந்திரமுகி. திரில்லர் கலந்த குடும்ப திரைப்படமான அப்படம் பல கோடி வசூலித்து சாதனை பெற்றது. அதன் பிறகு எவ்வளவு வெற்றி திரைப்படங்கள் வந்தாலும் சந்திரமுகி படத்திற்கு இன்னும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடமிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கதையை தான் ரஜினிகாந்த் தற்போது எதிர்பார்க்கிறார். அவருடைய அந்த எதிர்பார்ப்பை சிறுத்தை சிவா அண்ணாத்த திரைப்படத்தில் பூர்த்தி செய்யவில்லை. இதனால் சூப்பர் ஸ்டார் பல பேரிடம் கதைகளை கேட்டு வருகிறார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த அந்த மாதிரியான கதை மட்டும் அவருக்கு இன்னும் அமையவில்லை. இதனால் அவர் எதுவுமே செட் ஆகவில்லை என்ற உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார்.

மேலும் அவர் தன்னை கதை சொல்வதற்காக அணுகும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நல்ல கதை வைத்திருப்பவர்கள் தாராளமாக எனக்கு கதை சொல்ல முன் வரலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் சூப்பர் ஸ்டார் எதிர் பார்க்கும் படியான ஒரு கதையை உருவாக்க பல இயக்குனர்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Trending News