திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் வாழ்நாள் சாதனையை செஞ்சு விட்ட ஜெயிலர்.. ரஜினியின் அசர வைக்கும் ரெக்கார்ட்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகி அதிரி புதிரையை கிளப்பி வருகிறது. தொடர் தோல்விகளால் கொஞ்சம் டல்லாகி இருந்த ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய ரெக்கார்ட் பிரேக்காக அமைந்திருக்கிறது. இதன் மூலம் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்து விட்டார். ரஜினி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் குதூகலித்து கொண்டிருக்கின்றனர்.

பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆன இந்த படம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என அத்தனை சூப்பர் ஸ்டார்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியதால் இந்திய சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரும் படத்திற்கு அமோக ஆதரவை கொடுத்து விட்டனர். மேலும் திரைக்கதை மற்றும் ரஜினியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆகிவிட்டது.

Also Read:இவ்வளவு காசு இருந்தும் சின்னத்திரையில் நடிக்க இதுதான் காரணமா.? சீரியல் வசனங்களால் தளபதியை அசிங்கப்படுத்தும் எஸ்ஏசி

கடந்த பத்தாம் தேதி அன்று ரிலீசான இந்த படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் நிலவரம் வெளியாகி மிரள செய்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் படம் முதல் நாள் வசூல் 100 கோடியை நெருங்கியது. அதன் பின்னர் தற்போது வார இறுதி ஆன வெள்ளி, சனி, , ஞாயிறு நிலவரப்படி படம் ரிலீஸ் ஆகி நான்கு நாட்களில் ஒட்டுமொத்த வசூல் 300 கோடியை தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனின் கிங்மேக்கராக இருந்து வருபவர் தளபதி விஜய். கடந்த சில வருடங்களாக இவருடைய படங்கள் தான் கோடிக்கணக்கில் வசூலித்து முதலிடத்தில் இருந்தன. இறுதியாக விஜய் நடித்து பொங்கல் அன்று ரிலீஸ் ஆன வாரிசு படத்தில் மொத்த வசூல் 320 கோடி என சொல்லப்படுகிறது. தற்போது இந்த வசூலை நான்கே நாட்களில் தட்டி தூக்கி இருக்கிறது ரஜினியின் ஜெயிலர் படம்.

Also Read:பீஸ்ட் வெற்றியா, தோல்வியா.? நெல்சனிடம் விஜய் கூறிய விளக்கம்.. மறுபடியும் இந்த கூட்டணி தொடருமா.?

அதிலும் முதல் நாள் 100 கோடியை தொட ஒரு சில லட்சங்களே கம்மியாக இருந்த ஜெயிலர் படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரே நாள் வசூல் நூறு கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வசூலில் எப்போதுமே நம்பர் ஒன்னாக இருக்கும் தளபதி விஜய்யின் வாழ்நாள் சாதனையை நான்கே நாட்களில் துவம்சம் செய்து விட்டது ரஜினியின் ஜெயிலர் பட வசூல்.

மேலும் இந்த நான்கு நாட்களில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 32 கோடியும், கேரளாவில் 23 கோடியும், கர்நாடகாவில் 27 கோடியும், இதர மாநிலங்களில் ஆறு கோடியும், வெளிநாடுகளில் 135 கோடியும் வசூலித்திருக்கிறது. விரைவில் ஜெயிலர் படத்தின் வசூல் 500 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் ரெக்கார்ட் பிரேக் அமைத்துவிடும் இந்த படம்.

Also Read:நார்வேயில் த்ரிஷாவுடன் ஜாலி பண்ணும் தளபதியின் புகைப்படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்ல

Trending News