புதன்கிழமை, ஜனவரி 15, 2025

74 வயதில் 170 படங்கள், 200 கோடி சம்பளம்.. ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Rajinikanth Net Worth: டிசம்பர் 12, 2024 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 74 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 70 வயதை தாண்டியும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார்.

இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 500 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது. ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு பற்றி Forbes India வெளியிட்டு இருக்கிறது.

அதன் தகவலை பார்க்கலாம். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு

இன்று நின்று பார்க்க நேரம் இல்லாமல் அவர் சொன்ன மாதிரியே குதிரை போல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினிக்கு இது தான் கடைசி படம், அதுதான் கடைசி படம் என சுற்றி இருப்பவர்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் பணிபுரிய ஆர்வம் காட்டி வருகிறார். நெல்சன் உடன் ஜெயிலர் படத்தை முடித்து இப்போது லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்தில் இணைந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 150 கோடியில் இருந்து 210 கோடி சம்பளமாக பெறுகிறார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 450 கோடி ஆகும்.

ரஜினிகாந்த் இருக்கு போயஸ் கார்டனில் பெரிய சொகுசு பங்களா இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த வீடு அவர் 2002ல் கட்டியது. இதன் இப்போதைய மதிப்பு 35 கோடியாகும்.

அது மட்டுமில்லாமல் 20 கோடி மதிப்பிலான கல்யாண மண்டபத்தையும் நடத்தி வருகிறார். ரஜினிக்கு சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டில் இரண்டு மாடல் கார்களை வைத்திருக்கிறார். Rolls Royce Ghost என்ற கார் மாடலின் மதிப்பு 6 கோடியாகும்.

Rolls Royce Phantom என்ற காரின் மாடல் 16.5 கோடி ஆகும். ரஜினிகாந்த் இடம் இருக்கும் பி எம் டபிள்யூ காரின் மதிப்பு 1.77 கோடி ஆகும். 2.55 கோடி மதிப்பில் மெர்கண்டைல் கார் மற்றும் 3.10 கோடி மதிப்பில் லம்போகினி காரும் வைத்திருக்கிறார்.

Trending News