செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

குட்டி ரஜினியாக நடித்த படிக்காதவன் பட ஹீரோ அதிர்ச்சி மரணம்.. ஐயோ சமுத்திரம் பட நடிகையின் கணவரா.?

padikkathavan Movie Actor Passed Away: திரையுலகில் அடுத்தடுத்து நடந்து வரும் மரணங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பல முக்கிய பிரபலங்கள் நம்மை விட்டு நீங்கிய நிலையில் இன்று ரஜினி பட நடிகர் 49 வயதில் மரணம் அடைந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினி ஆக கலக்கியிருந்தவர் தான் மாஸ்டர் சுரேஷ். அதில் அச்சு அசல் அவர் ரஜினியை போலவே ஸ்டைல் செய்வார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் சூர்ய கிரண் என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

அதன் பிறகு ஒரு இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவர் சில தோல்விகளின் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு தெலுங்கு பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதாவின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: 19 வயது தங்கல் பட நடிகை திடீர் மரணம்.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்

அது மட்டுமின்றி சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த காவேரியின் முன்னாள் கணவர் ஆவார். இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். கடந்த சில மாதங்களாகவே மஞ்சள் காமாலையின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூர்ய கிரண் இன்று உயிர் நீத்துள்ளார்.

இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத பல பிரபலங்கள் தற்போது தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இதிலிருந்து மீண்டு வரும் சக்தியை இறைவன் தான் கொடுக்க வேண்டும்.

Also read: துணிவு பட நடிகர் அகால மரணம்.. அடுத்தடுத்த சோகத்தால் பதறும் திரையுலகம்

Trending News