சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் ரஜினிகாந்த்.. இன்று நடக்கவிருக்கும் முக்கிய பரிசோதனை

Rajinikanth: நேற்றைய இரவு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ரொம்பவும் மனம் வருத்தம் கொல்லும் அளவுக்கு அமைந்து விட்டது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியே வந்து ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் ஆக அமைந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வேற லெவலில் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட தருணத்தில் தான் திடீரென உடல் நலக்குறைவை ஏற்பட்டு ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூலி படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்த்திற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், ஒரு சில செய்திகள் ரஜினிகாந்த்திற்கு வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் தான் இதற்கு காரணம் என செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த்திற்கு இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சை இன்று நடக்கவிருக்கிறது எனவும் செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் மனைவி ரஜினிகாந்த், அவர் நன்றாக இருப்பதாகவும், பயப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லி இருப்பதாக தெரிகிறது.

இன்று நடக்கவிருக்கும் முக்கிய பரிசோதனை

இன்று காலை 9 மணிக்கு மேல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய உடலை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

எந்திரன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ரஜினிக்கு பெரிய அளவில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பல மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியா திரும்பினார். அரசியலுக்கு வருவதால் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவித்த ரஜினி பின்னர் தன்னுடைய உடல்நிலை காரணத்தால் அரசியல் எண்ணத்தில் இருந்து விலகுகிறேன் என அறிக்கை விட்டிருந்தார்.

இதற்காக அவர் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தும் கூட எதையுமே அவர் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை தன்னுடைய ரசிகர்களுக்கு பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே ரஜினிகாந்த் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எந்த பிரச்சனையும் இல்லாமல் உடல்நிலை சரியாகி ரஜினிகாந்த் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.

Trending News