செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெட் வேகத்தில் சூப்பர் ஸ்டார்.. நெல்சனை டம்மியாக்கும் ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்திற்குப் பிறகு ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தில் ரஜினி சிறை துறை உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் இணைவார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது.

தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதால், அதில் சூப்பர் ஸ்டார் பின்னி பெடல் எடுக்கிறார். இந்த வயதில் இப்படி ஒரு எனர்ஜியா! என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரும் வாயைப் பிளக்க செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Also Read: லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

ஒவ்வொரு இடத்தின் சூட்டிங் செட்யூல்லை ரஜினி அவ்வளவு வேகமாக முடிக்கிறாராம். சமீபத்தில் ராஜஸ்தானில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கே வெயில் மற்றும் காற்றின் அளவு அதிகமாக இருந்திருக்கிறது. சொன்ன நேரத்திற்கு சூட்டிங்க்கு வந்து முடித்துக் கொடுத்து விடுகிறாராம் ரஜினி.

ஒரு வாரம் ஷூட்டிங் என்ற செட்யூல் போடப்பட்டது . ஆனால் ரஜினி அதை 1 நாள் முன்கூட்டியே முடித்து விட்டாராம். கூடிய விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். நெல்சன் எதிர்பார்த்ததை விட ரஜினி அவரின் வேலைகளை சிறப்பாக செய்து அவரை டம்மி ஆக்கிவிட்டாராம்.

Also Read: தோல்வி பயத்தை காட்டிடாத நெல்சா.. ஜெயிலர் படத்தில் இறங்கிய அடுத்த பாலிவுட் நடிகர்

இப்படி ஒரு எனர்ஜியா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் யோசனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ரஜினி அசால்டாக செய்து விடுகிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் போது நெல்சனை டம்மி ஆக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார்.

இதனால் தான் ரஜினி 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அதுமட்டுமல்ல இன்று வரை அவருடைய சூப்பர் ஸ்டார் என்ற கவுரவத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது, அவருடைய எனர்ஜிக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கின்றனர்.

Also Read: பயங்கர திட்டத்தோடு உருவாகும் தளபதி 69.. பல மடங்கு லாபத்திற்காக பிளான் போடும் விஜய்

Trending News