புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

விஜய் வாரிசு திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவும் பிளான் செய்து வருகிறார். அதில் இளம் இயக்குனர் ஒருவர் அவருக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். விஜய்க்கும் அந்த கதை பிடித்துப் போனதால் விரைவில் அந்தக் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அதில் சிறு மாற்றம் நடந்திருக்கிறது. அதாவது லவ் டுடே திரைப்படத்தால் பிரபலமாகி இருக்கும் பிரதீப் ரங்கநாதன் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர் ரஜினிக்கு கதை சொல்லப் போகிறாராம். ஏனென்றால் விஜய் கமிட் செய்திருக்கும் படங்களை முடித்துவிட்டு இவர் படத்தில் நடிக்க வருவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும்.

Also read: எது பேசினாலும் சர்ச்சையாகிறது.. நான் நிறைய சாதிக்கணும், வாரிசு படத்தால் நொந்து போன பிரபலம்

அதை தெரிந்து கொண்ட லைக்கா நிறுவனம் தற்போது பிரதீப்பை அழைத்து ரஜினிக்கு கதை சொல்ல கேட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக லைக்கா நிறுவனம், சிபி சக்கரவர்த்தி, ரஜினி மூவரும் இணைவதாக தான் இருந்தது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தி சொன்ன கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்காத காரணத்தால் வேறு இயக்குனரை பார்க்கலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார்.

ஆனால் ரஜினியின் கால்ஷூட்டை மிஸ் பண்ண விரும்பாத லைக்கா தரப்பினர் தற்போது பிரதீப்பை வளைத்துப் போட்டுள்ளார்கள். இப்போது சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக உள்ளே வந்திருக்கும் பிரதீப் ரஜினிக்கான கதை வேலைகளில் மும்முரமாக இருக்கிறாராம். அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது தடபுடலாக நடந்து வருகிறது.

Also read: விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி

அது மட்டுமின்றி பிரதீப் கூறிய கதை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து விட்டதாம். இன்னும் ரஜினி அந்த கதையை கேட்கவில்லை. அவர் மட்டும் கதையை கேட்டு ஓகே செய்து விட்டால் அடுத்த கட்ட வேலைகளை உடனே ஆரம்பிக்க காத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் என்ற தகவல் இப்போதே பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மாஸ் ஹீரோ விஜய்யை இயக்க காத்துக் கொண்டிருந்த பிரதீப்புக்கு சூப்பர் ஸ்டார் படத்தையே இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு இவரை வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் மிகவும் பாராட்டி இருந்தார். அதனால் எப்படியும் இவருடைய கதையை அவர் ஓகே செய்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் ரஜினி.. மாஸ்டர் பிளான் போட்டதை அம்பலப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்

Trending News