ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நெல்சனை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ரஜினி.. இந்த 3 படங்களையும் ஓரங்கட்டிய ஜெயிலர்

Super Star Rajinikanth- Jailer:கடந்த சில தினங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பரப்பரப்பை கிளப்பி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அந்த படத்தின் இரண்டு பாடல்களை சொல்லலாம். தமன்னாவின் குத்தாட்டத்தில் காவாலா, ரஜினியின் மாஸ் என்ட்ரியில் ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகமாக்கிவிட்டது.

ரஜினிக்கு இந்த படம் ரொம்பவும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு காரணம் அவருடைய கடைசி இரண்டு படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்தே தோல்வி அடைந்தது தான். என்னதான் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி விட்டாலும் படம் மண்ணைக் கவியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனாலேயே ரஜினி தன்னுடைய அடுத்த படத்திற்கு நிறைய கதைகளை கேட்டு பின்னர் நெல்சனை ஓகே செய்தார்.

Also Read:ரஜினியே கடுப்பாகி கட்டிய முடிவு.. எல்லாருடைய வாயையும் அடைத்த சூப்பர் ஸ்டார்

ரஜினியை வைத்து எத்தனையோ இயக்குனர்கள் படம் இயக்க தயாராக இருக்கும்போது நெல்சனை அவர் தேர்ந்தெடுத்தது எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ரஜினி நெல்சன் இடம் இந்தப் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமான ஒன்று. இது நன்றாக அமைய வேண்டும். அதிலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த மூன்று படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் வைத்திருக்கிறார்.

நான் இன்னும் மூன்று நான்கு படங்கள் தான் நடிப்பேன், அதனால் இந்த படம் எனக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம், தளபதி விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் இந்த மூன்று படங்களை விட பெஸ்டாக இருக்க வேண்டும் அப்படி ஒரு கதை சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:ஹுக்கும் பாடலைக் கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ரஜினி.. இவ்வளவு சர்ச்சை போயிட்டு இருக்கு இப்படி சொல்லிட்டாரே!

அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து அமைதியாக இருந்த ரஜினி இந்த படத்தின் மூலம் நினைத்ததை சாதித்து விடுவார் என்பது நன்றாக தெரிகிறது. படத்தின் பாடல்களை பயங்கர வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் கதை மற்றும் வசூல் கண்டிப்பாக அந்த மூன்று படங்களின் சாதனையையும் முறியடித்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயக்குனர் நெல்சனுக்கும் இது ரொம்பவும் முக்கியமான படம் என்பதால், ரஜினி என்ன சொல்கிறாரோ அதை கரெக்டாக செய்து முடித்திருக்கிறார். படம் தொடக்கத்தில் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி என ஆரம்பித்து தென்னிந்திய நடிகர்கள் பலரையும் களம் இறக்கி விட்டார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. விஜய், ரஜினியை வைத்து குளிர் காயும் அனிருத்

Trending News