வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நெல்சன், லோகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்ட ரஜினி, நெல்சனை கண்டுக்காதது ஏன்.? சூப்பர் ஸ்டார் போட்ட கணக்கு

ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் டிராவல் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் பட இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு அவர்களை தூக்கி படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் விஜய்க்கு ஆஸ்தான இயக்குனர் அட்லீக்கு மட்டும் ஏன் இன்றுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் கேள்விக்குறி.

அட்லி தமிழில் கடைசியாக இயக்கிய படம் பிகில் அதுவும் 2019 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அவர் தமிழில் எந்த படங்களும் இயக்கவில்லை. பிகில் படத்திற்கு பின் அவர் பாலிவுட் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி விட்டார். 2019 ஆம் ஆண்டு அவருக்கு பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் இடம் இருந்து அழைப்பு வந்தது.

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸும் பரவியது. மும்பையில் 4 ஆண்டுகள் செட்டில் ஆகிவிட்டார் அட்லி. நான்கு வருடங்கள் சாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தை இயக்கினார். படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி கிட்டதட்ட 1100 கோடிகள் வசூலித்து அட்லிக்கு மாபெரும் பெயரை வாங்கித் தந்தது.

இப்பொழுது பாலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் அட்லி தான். அடுத்து அவர் சல்மான் கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். மீண்டும் தமிழுக்கு வருவாரா என்று தெரியவில்லை. பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்குவதால் அங்கேயே செட்டிலாகும் எண்ணத்தில் இருக்கிறார் அட்லீ. விஜய் போல் ஷாருக்கான், சல்மானுக்கு செல்ல பிள்ளையாக மாறிவிட்டார் அட்லீ.

இந்த காரணங்களால் தான் இதுவரை ரஜினி, அட்லியுடன் இணையவில்லை அது மட்டும் இன்றி ரஜினி ஒரு இயக்குனரை தேர்ந்தெடுக்கும் போது அவரைப் பற்றி நன்கு விசாரித்த பின் வாய்ப்பு கொடுப்பார். ஆனால் அடிலியை பற்றி இதுவரை அவர் காதுகளுக்கு நல்லவிதமாய் செய்தி போகவில்லை. அட்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டுவார்.

Trending News