ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரூட்டை மாற்றும் சூப்பர் ஸ்டார்.. தலைவர் 172-க்கு இந்த புரட்சியாளரை தேர்ந்தெடுக்க காரணம் மக்களா? பணமா?

Superstar Rajinikanth confirms Kollywood famous director for thavalivar172: தர்பார் மற்றும் அண்ணாத்த தோல்விக்கு பின் வயசாயிடுச்சோ என்று என்ன வைத்தவர்களை ஜெயிலரின் மூலம் தரமான கம்பேக் கொடுத்து இளம் தலைமுறையினருகு போட்டியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் நேர்மறையான விமர்சனங்களோடு அதிக அளவில் வசூலை வாரிக் குவித்த தமிழ் படம் என சாதனையும் புரிந்தது.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்த ரஜினி ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேலுடன் தனது அடுத்த படமான வேட்டையனில் பிஸியாகி இருந்தார். கூடவே மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலிலும் ஒப்பந்தமானார் தலைவர்.

வேட்டையனுக்கு பின் விக்ரம் புகழ் லோகேஷ் உடன்  தலைவர் 171 காக கூட்டணி சேர்வதாக  அதிரடியாக அறிவித்தார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜின்  தலைவர் 171  இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தலைவர் படம்னா குத்தாட்டம் கண்டிப்பா வேணும்.. ஜெயிலர் தமன்னாவை மிஞ்ச வரும் வேட்டையன் நடிகை

இதனைத் தொடர்ந்து தலைவர் 172 காக பல இளம் இயக்குனர்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் மாற்றத்தை தேடி தனது ரூட்டை மாற்றவுள்ள சூப்பர் ஸ்டார் அவர்கள், மாறுபட்ட கதையை கருவாக வைத்து தொடர்ச்சியாக அதே பாணியில் இயக்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜை தனது இந்த படத்திற்கு இயக்குனராக தேர்ந்தெடுத்து உள்ளார் தலைவர்.

பா ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அவரது வெற்றிப் பயணம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒரே கதைகருவை வைத்து திரை கதையை மாற்றி போட்டு வரும் இந்த புரட்சியாளரை சமீபத்தில் தலைவர் சந்தித்து உள்ளது இந்த திருப்பத்திற்காகத்தான்.

ஆம் தலைவர் 172 காக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாரின் தயாரிப்பில் நின்று நிதானமாக தலைவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகப் போகிறார் மாரி செல்வராஜ்.

இதன் பின்னணியில் தலைவர் மக்களுக்காக ஏதாவது கூற வேண்டும் என்ற நோக்கில் சமூக கருத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு இந்த புரட்சியாளரை தேர்ந்தெடுத்து இருக்கிறாரா? அல்லது பத்தோடு பதினொன்றாக இளம் தலைமுறைக்கு வாய்ப்பளித்து வசூலை அள்ளி குவிக்க தேர்ந்தெடுத்து உள்ளாரா என்பது புரியவில்லை என சினிமா ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

Also read: தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஏப்ரலில் படப்பிடிப்பை கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

Trending News