வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித், விஜய் கிட்ட பிடித்தது இதுதான்.. ஓபன் ஆக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் அஜீத் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல கட்டமாக நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் கொராணா பரவல் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ளது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் ரஜினியின் காட்சிகளை முடித்து விட்டு அவரை சென்னைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் போல் வேக வேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

vijay-rajini-cinemapettai
vijay-rajini-cinemapettai

ரஜினிகாந்த் எப்போதுமே சக நடிகர்களை புகழ்ந்து பேச தவறியதில்லை. அந்த வகையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரிடமும் என்ன பிடிக்கும் என்பதை ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ajith-rajini-cinemapettai
ajith-rajini-cinemapettai

தல அஜித்தின் அவருடைய வெளிப்படைத் தன்மை மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டார். அதற்கு காரணம் கலைஞர் நடத்திய விழா ஒன்றில் அவருக்கு எதிராகவே மேடையில் அஜித் பேசினார் என்பதும், அப்போது ரஜினிகாந்த் எழுந்து கை தட்டினார் என்பதுமே அதற்குச் சான்று. அதுதவிர விஜய்யின் அமைதி மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News