திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 168 திரைப்படங்கள் வரை நடித்த நிலையில், இதில் சில ஹிந்தி கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்திற்கு பின் 2002ஆம் ஆண்டு பாபா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

இத்திரைப்படங்களுக்கு நடுவில் ரஜினிகாந்த் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். 2000 ஆண்டு புலாண்டி என்ற திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர், ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இத்திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான நாட்டாமை திரைப்படத்தின் ரீமேக்காகும்.

Also Read : ஜெயிச்சவங்க மட்டும் தான் ரஜினியோட கூட்டணி போட முடியும்.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

தமிழில் வெளியான நாட்டாமை படத்தில் விஜயகுமார், சரத்குமார் இருவரும் நடித்த நிலையில் இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. மேலும் பிலிம்பேர் விருது, தமிநாடு ஸ்டேட் விருதுகள் உள்ளிட்டவை கிடைக்கப்பெற்றது. இதனிடையே பாலிவுட் இயக்குனர் ராமா ராவ் இயக்கத்தில் வெளியான புலாண்டி திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தில் கஜராஜ் தாகூர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நடை, உடை, பாவனை, ஸ்டைல் எல்லாவற்றிலும் படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த் எப்படி நடித்திருப்பாரோ அதேபோன்று ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருப்பார்.

Also Read : பாட்ஷா ரஜினியுடன் வெளிவந்த முத்தையாவின் முத்துராமலிங்கம் பட போஸ்டர்.. வெறிபிடித்த சிங்கம் போல இருக்கும் ஆர்யா

ஏற்கனவே நாட்டாமை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான பெடராயுடு திரைப்படத்தில் ரஜினிகாந்த் பெடராயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 2000ஆண்டு வெளியான புலாண்டி படத்திலும் நடித்திருப்பார். இத்திரைப்படம் தான் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான கடைசி ஹிந்தி திரைப்படமாகும். இப்படத்திற்கு பின் பல ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தாமல் இத்திரைப்படத்தின் வெற்றியையடுத்து 2002ஆம் ஆண்டு மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான பாபா திரைப்படம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இப்படத்தின் தோல்வியை சரிக்கட்டுவதற்காக தமிழிலேயே தொடர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

Also Read : ரஜினி படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்.. எதிர்பாராத பரிசு கொடுத்து வாழ வைத்த சூப்பர் ஸ்டார்

Trending News