திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்லீயால் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூப்பர் ஸ்டார்.. பதட்ட நிலையில் ஷாருக்கான்

அட்லீ முதல்முறையாக பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். கடைசியாக ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி பதான் படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனாலேயே ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மேலும் ஜவான் படம் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read : விஜய்யிடமே வேலையை காட்டிய அட்லீ.. உச்சகட்ட கோபத்தில் கதறவிட்ட தளபதி

ஆனால் தற்போது வரை படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான டீசர், போஸ்டர், ட்ரெய்லர் என படக்குழு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பல மாதங்களாக படக்குழு ப்ரோமோஷன் வேலையை செய்து வந்தது.

அவர்கள் எதிர்பார்த்தது போல் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூலும் வாரிக் குவித்து வருகிறது. ஆனால் பாலிவுட் ஸ்டார் ஆன ஷாருக்கான் படத்திற்கு இவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக அட்லீ ஜவான் படத்தை மட்டுமே உருட்டி வருகிறார்.

Also Read : ஜவான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

ஆனாலும் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் கூட தற்போது வரை வெளியாகவில்லை. ஜவான் படத்தில் அட்லீ என்ன தான் செய்து வைத்திருக்கிறார் என ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். மேலும் அடுத்த மாதம் ஜவான் படம் வெளியாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு ஒரு மோசமான அபிப்பிராயம் அட்லீ மீது வந்துள்ளது. மேலும் அட்லீயை பற்றி தெரியாமல் அவரிடம் மாட்டிக் கொண்டோமே என்ற எண்ணமும் தற்போது ஷாருக்கானுக்கு வந்திருக்கக்கூடும். அதுமட்டுமின்றி தற்போது உள்ள மார்க்கெட்டை ஜவான் படத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற யோசனையில் ஷாருக்கான் உள்ளாராம்.

Also Read : எதிர்பார்ப்பை தூண்டிய அட்லீ படத்தின் முதல் நாள் வசூல்.. பதானை தொடர்ந்து வேட்டைக்கு தயாராகும் ஷாருக்கான்

Trending News