வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாதாளம் வரை பாய்ந்த பணத்தை கொண்டாடி அழிந்த சூப்பர் ஸ்டார்.. எம்ஜிஆருக்கு முன் இருந்த பாரி வள்ளல்

Kollywood super star lose his fame and property தளபதியின் பேமஸ் வசனமான “வாழ்க்கை ஒரு வட்டம் கீழே இருக்கிறவன் மேல போவான், மேலே இருக்கிறவன் கீழே வருவான்” என்பது போல் தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே டி என அறியப்படும் தியாகராஜ பாகவதர் தன் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தார்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் பெண் வேடம் புரிந்து பின் பல சாதனைகளை புரிந்து இருப்பார். இதற்கு நேர் மாறாக  தியாகராஜ பாகவதரோ  நாடகத்தில்  பல வெண்வேடம் புரிந்து பின் முதல் படமான பவளக்கொடியில் அர்ஜுனன் வேடத்தில் நடித்திருப்பார். சினிமாவில் ஒரு படம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை புரிவது என்பது அசாதாரணமான விஷயம்.  தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று 3 தீபாவளிகளை கடந்த வெற்றி படமாகும். இப்பேர்பட்ட நடிகரை பற்றி கேட்கவா வேண்டும்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முதன் முதலில் இவரைப் பார்த்து தான் ஹேர் ஸ்டைல் வைப்பது,  இவரை போன்ற ஆடை அணிவது, காதில்  கடுக்கன்  போன்றவைகளின் முன்னோடி இவரே.  இவர் தனது வெண்கல குரலால் பாடிய  “மன்மத லீலையை வென்றான் உண்டோ”,  “ஜெய கிருஷ்ணா முகுந்தா” போன்ற பாடல்கள்  காலத்தால் அழியாதவை.

Also Read : தங்கத் தட்டில் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர்.. ஒரே தவறால் புகழை இழந்து மரணித்த பரிதாபம்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகரான எம் கே டி, தங்கத்தட்டில் சாப்பிட்டு  பன்னீரில் குளித்து,  சொகுசு கார்களில் வலம் வந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர், தன் கனவிலும்  நினைத்துப் பார்க்காத  வறுமையில் சிக்கி சின்னாபின்னமானார். லட்சுமி காந்தன் கொலை வழக்கு இவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் வறுமையுடன் போராடிய பாகவதர் கண்பார்வை இழந்தும் கல்லீரல் நோயினால் அவதிப்பட்டும்  தனது இறுதி காலத்தை கழித்தார். காவிய கதாபாத்திரங்களாக நடித்ததோடு மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வள்ளலாகவே இருந்த பாகவதர் சினிமா துறையின் மீது இருந்த கோபத்தால் தன் இறப்பிற்கு பின் தன் உடலை சினிமாக்காரர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி இறந்தார்.

Trending News