புதன்கிழமை, ஜனவரி 22, 2025

40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

Rajini-Vijay: விஜய், ரஜினி இருவருக்கும் இடையே நடக்கும் மறைமுக பனிப்போர் தான் இப்போது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் கொளுத்தி போட்ட பிரபலங்கள் மிகப்பெரும் சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டனர்.

அதைத்தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தாலும் சூப்பர் ஸ்டார் அமைதியாகவே இருந்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்ற ரீதியில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் மூலம் அவர் நான் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்தார்.

Also read: சூப்பர் ஸ்டாரை காயப்படுத்திய 5 பேர்.. வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா

அதைத்தொடர்ந்து விஜய்க்கும் ரஜினிக்கும் போட்டி ஆரம்பித்துவிட்டது என பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். அது மட்டுமின்றி இரு தரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாவில் சண்டையிட்டு ஒரு வழி செய்தனர். ஆனால் இந்த அமளி துமளி அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

நேற்று நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் இந்த பட்டத்தை நான் ஆரம்பத்தில் வேண்டாம் என்று தான் கூறினேன். ஏனென்றால் சிவாஜி, கமல் போன்ற நடிகர்கள் இருக்கும்போது நான் இப்படி பட்டம் வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என கூறினேன். ஆனால் இதை வைத்து நான் பயந்து விட்டதாக பேசினார்கள்.

Also read: வில்லத்தனத்தின் மொத்த உருவமான ஆண்டனி தாஸ்.. மிரட்டல் வீடியோவை வெளியிட்ட லியோ டீம்

எனக்கு ஒருபோதும் பயம் கிடையாது. இறைவனுக்கும், நல்ல மனிதர்களுக்கும் மட்டுமே நான் பயப்படுவேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் எப்படி சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது என்பதையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் அனைவருக்கும் லாபம் தான் கிடைத்தது எனவும் கூறினார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதன் மூலம் விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் அவர் கூறியுள்ளார். மேலும் மற்ற மொழி படங்களை பற்றியும் அவர் பாராட்டி பேசி இருந்தார். இதுவே அவருடைய முதிர்ச்சியை காட்டுகிறது. அந்த வகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான தன்னுடைய திரை அனுபவத்தை அவர் 30 நிமிடங்களில் எடுத்துக்காட்டி விட்டார். இதன் மூலம் விஜய், ரஜினி மோதல் என பற்றி எரிந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்திருக்கிறது.

Also read: சாதா காக்காவ சொன்னா அண்டங்காக்காவுக்கு கோபம் வருது.. ரஜினியை விமர்சித்து வான்டடா வண்டியில் ஏறிய ப்ளூ சட்டை

Trending News