வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

ஜெயிலர் படத்தை ஓட வைக்க அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டார்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் எங்கு சென்றாலும் அது பரபரப்பு தான். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அடுத்ததாக ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் அவர் நடிக்க இருப்பது படத்திற்கு இன்னும் பலமாக அமைந்துள்ளது.

இதை அடுத்து ஜெய் பீம் ஞானவேல் கூட்டணியிலும் சூப்பர் ஸ்டார் இணைந்துள்ளார். இப்படி பிஸியாக இருக்கும் வேலையிலும் அவர் அவ்வப்போது கோவில், தர்கா போன்ற இடங்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு திடீர் விசிட் அடித்திருப்பது வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: சூப்பர் ஸ்டாரை ஓவர் டெக் செய்திருக்கும் டாப் நடிகர்.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி

அங்கு அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டாரின் போட்டோக்கள் இப்போது சோசியல் மீடியாக்களில் அதிவேகமாக பரவி வருகிறது. ரஜினி பொது இடத்திற்கு வரும்போதும் சரி முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போதும் சரி எளிமையாக தான் இருப்பார். அந்த வகையில் தற்போது அவர் கோவிலுக்கும் வேஷ்டி, டி-ஷர்ட் என சிம்பிளாக வந்திருந்தார்.

அவரின் வருகையை தொடர்ந்து அண்ணாமலையாருக்கு சிறப்பான பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலை விட்டு வெளியே வந்த ரஜினியை பார்த்த பக்தர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டனர். சிலர் அவரை போட்டோ மற்றும் செல்பி எடுக்கவும் முயற்சி செய்தனர்.

Also read: ரஜினி நடிக்க இருந்து ட்ராப்பான 5 படங்கள்.. சங்கர் கேட்டும் நோ சொன்ன சூப்பர் ஸ்டார்

அவர்களை எல்லாம் புன்னகை முகத்தோடு எதிர்கொண்ட சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் கை காண்பித்தப்படியே அங்கிருந்து சென்றார். லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை வந்ததன் காரணமாகவே இந்த தரிசனம் நடைபெற்றிருக்கிறது.

அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டார்

actor-rajini
actor-rajini

இது ஒரு காரணமாக இருந்தாலும் ஜெயிலர் படம் நன்றாக ஓடி வசூல் வேட்டை ஆட வேண்டும் என்ற ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் இப்படத்தை தான் இப்போது பெரிதும் நம்பி இருக்கிறார். அதன் காரணமாகவே இந்த தரிசனம் நடந்திருக்கலாம் என்ற கருத்தும் இப்போது நிலவி வருகிறது.

திருவண்ணாமலை கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்

rajini-actor
rajini-actor

Trending News