சூப்பர் ஸ்டார் இதுவரை செய்த இமாலய சாதனை.. தளபதியால் தொட கூட முடியாது, இனி யாரும் பிறக்கவும் இல்ல

vijay-rajini-varisu-superstar
vijay-rajini-varisu-superstar

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல போல இந்தியா முழுவதும் அந்த இடத்திற்கு சொந்தக்காரர் ரஜினி மட்டும் தான். சமீபத்தில் இதுகுறித்து பூதாகரப் பிரச்சனை ஒன்று வெடித்தது. அதாவது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியிருந்தார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் சினிமாவில் விஜய்க்காக ஒரு இடம் கட்டாயம் உள்ளது. ஆனால் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூறுவதற்கான காரணம் அவர் இமாலய சாதனைகளை புரிந்துள்ளார்.

Also Read : ரஜினியின் 25 வருட சாதனையை முறியடிக்க போராடிய திரையுலகம்.. ஒருவழியாக முறியடித்த ராஜமவுலி

அதாவது மற்ற மொழிகளில் பல படங்கள் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தாலும் தமிழ் மொழியில் இன்னும் அது போன்ற ஹிட் படங்கள் வரவில்லை. மேலும் அதிக கலெக்ஷன் செய்த தமிழ் படங்கள் பட்டியலை பார்த்தால் 300 கோடிக்கு மேல் ரஜினியின் கபாலி மற்றும் 2.0 படம் இடம் பெற்றுள்ளது. மேலும் 200 கோடிக்கு மேல் விஜய் அதிக படங்கள் கொடுத்திருந்தாலும் 300 கோடிக்கு மேல் விஜயின் பிகில் மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.

கமல் காலத்துக்கு தகுந்தார் போல் படங்களில் நடிக்க கூடியவர். ஆனால் ரஜினி தான் எல்லா மக்களிடமும் சினிமாவை கொண்டு சேர்த்தவர். மேலும் இப்போது சினிமாவில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகித்தாலும் 25 வருடங்களுக்கு முன்பு வெளியான முத்து படத்தின் சாதனையை இப்போது தான் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் முறியடித்தது.

Also Read : செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்

சினிமாவில் பல நட்சத்திரங்கள் இருக்கும்போது சினிமாவில் ஒரு நடிகரை மட்டும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு அவர் செய்த சாதனைகள் தான் காரணம். இப்போது விஜய்க்கான நேரம் என்றாலும் அவர் ரசிகர்களை தன்வசம் கட்டி போட்டுள்ளார். ஆனால் இப்போதும் ரஜினி அவருக்கு இணையான கடுமையான போட்டி கொடுத்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் இடத்தை தளபதி தொட கூட முடியாது. அதுமட்டுமின்றி இனி சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க புதிதாக பிறக்கவும் ஆளில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் நங்கூரமாக சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்துள்ளார் ரஜினிகாந்த். இன்னும் ஒரு வருடங்கள் கழித்தாலும் ரஜினியின் பெயரை யாராலும் மறக்க முடியாது.

Also Read : மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

Advertisement Amazon Prime Banner