பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர் ஷாருக்கான். இவர் பாலிவுட் சினிமாவின் வசூலை மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதாவது, சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் பாய்காட் செய்து கொண்டிருக்க, பாலிவுட்டை தாண்டி தெலுங்கு, தமிழ், கன்னட மொழி சினிமாக்கள் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து கல்லா கட்டி வருகின்றன.
அப்படியிருக்கும் போது கடந்தாண்டும், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – ஜான் ஆபிரகாம் – தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பதான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதைத்தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில்,ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படமும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் பாலிவுட் சினிமாத்துறை மகிழ்ச்சியில் உள்ளது. அடுத்து, கிங் படத்திலும், பதான் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
ஷாருக்கான் – ஆர்யன் கானின் மதுபான நிறுவனத்திற்கு விருது!
இந்த நிலையில், ஷாருக்கானுக்கும் அவரது மகன் ஆர்யன் கானுக்கும் சொந்தமான மதுபானம் உலகிலேயே சிறந்த மதுபானமாகத் தேர்வாகியுள்ளது. சமீபத்தில், அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மதுபானங்களுக்கான போட்டி ஒன்று நடந்தது. இதில், ஷாருக்கானின் தியாவால் – Dyavol நிறுவனம் பங்கேற்றது.
இதில், தியாவால் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி உலகின் சிறந்த ஸ்காட்ச் என்ற பெயரை பெற்றுள்ளது. அதாவது, The Testing Alliance என்ற அமைப்பு, ஆண்டு தோறும் உலக மதுபான போட்டி நடத்தி வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான, நியூயார்க் மதுபான போட்டியை நடத்தியது. இத்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் இப்போட்டியில் பங்கேற்ற பல நிறுவனங்களின் மதுபானங்களை ஆய்வு செய்து, அவற்றின் தரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சோதித்து, சிறந்த மதுபானத்தை அறிவிப்பர்.
இதுகுறித்து ஷாருக்கான் கூறியதாவது:
அதன்படி, இந்த ஆண்டிற்கான சிறந்த மதுபானத்திற்கான விருது என்ற தலைப்பின் கீழ், தி இன்செப்சன் என்ற விருதை ஷாருக்கானின் தியாவால் பெற்றுள்ளது. இதுகுறித்து, ஷாருக்கான் கூறியதாவது: ” நம் வாழ்க்கையில் மிகச்சிறந்த விசயங்களை ஆர்வம் & கவனத்துடன் உருவாக்கினால், அது சிறப்பான பெயரை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கைக்கு ஒரு சான்றாக உள்ளது ”என்று குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் தரமான சம்பவம்!
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டுதான், ஷாருக்கானின் நிறுவனம் இந்த மதுபான பிராண்டினை உலகில் அறிமுகம் செய்தது. இது பல உயர்ரகங்களின் கலவையில் 12 ஆண்டுகள் பழமையானவையாக இது உருவாக்கப்பட்டு சந்தைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே சினிமா தயாரிப்பு, ஐபிஎல், ஆடை நிறுவனங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மதுபான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.