Actor Sarathkumar: 90 களின் காலகட்டத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக இருந்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். தற்போது இவர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் சிக்சர் மேல் சிக்சர் அடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், வாரிசு என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்த சரத்குமாருக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களுடைய ஆதரவை பெற்ற போர் தொழில் திரைப்படம் பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.
புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் போர் தொழில். இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். பெண்களை மையப்படுத்தி நடக்கும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் கதைக்களத்துடன் இந்த படம் வெளியானது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிவாகை சூடியது.
Also Read:ரீ என்ட்ரியில் கலக்கும் 5 80ஸ் நடிகர்கள்.. மொத்த நடிகர்களையும் தூக்கி சாப்பிட்ட சுப்ரீம் ஸ்டார்
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பட குழுவினரால் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன் இந்த பட குழு சக்சஸ் மீட் நடத்தியது. இதில் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இயக்குனர் திணறிய போது, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் சரத்குமார் அத்தனை பேர் முன்னிலையிலும் யோசிக்காமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஓர் தொழில் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் இந்த சக்சஸ் மீட்டிங் போது பத்திரிக்கையாளர்களை கீழே அமர சொல்லி இருக்கிறார். அதற்கு அவர்கள் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்று பதில் அளித்த பொழுது இருக்கட்டும் இப்போது என்ன அதற்கு கீழே உட்காருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர் ஒருவர் விழா தொடங்கியதும் இயக்குனரிடம் கேள்வி எழுப்பினர்.
Also Read:20 நாட்களில் பல கோடி வசூலித்த போர் தொழில்.. தியேட்டர் ஓனர்களை கதி கலங்க வைத்த ஓடிடி
ஒரு படம் தானே ஹிட் ஆகியிருக்கிறது அதற்குள் உங்கள் குழுவினருக்கு தலைக்கனம் வந்து விட்டதா என்று அந்த பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு என்ன நடந்தது என்று தெரியாமல், என்ன பதில் சொல்வது என்றும் தெரியாமல் புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா ஸ்தம்பித்து போய்விட்டார், அதன் பின்னர் பத்திரிக்கையாளர் நடந்ததை எடுத்துக் கூறி மீண்டும் அதே கேள்வியை இயக்குனரை பார்த்து கேட்டிருக்கிறார்.
அந்த பத்திரிக்கையாளர் அப்படி பேசிக் கொண்டிருக்கும்பொழுது சரத்குமார் எழுந்து வந்து இது போன்ற விஷயங்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் வந்து எங்களிடம் சொல்லி இருக்கலாம். இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாது, இருந்தாலும் அவருடைய சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கொஞ்சமும் யோசிக்காமல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இது பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சரத்குமாரை மன்னிப்பு கேட்டதால் இந்த சர்ச்சையும் அதோடு முடிக்கப்பட்டது.