வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சுப்ரீம் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய கதை.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம்னு இருந்த ரஜினி

Supreme Star Sarathkumar shared interesting information about Rajinikanth: தமிழ் சினிமாவில் எந்த ஒரு பலமான திரைபின்புலமும் இல்லாமல்  தனக்குரிய பாதையை தானே வடிவமைத்து முன்னுக்கு வந்தவர்கள் ரஜினி மற்றும் சரத்குமார். அவர்களுக்கு இடையில் இருந்த ஆரோக்கியமான நட்பு பற்றி கோபிநாத் அவர்களின் நேர்கோணலில் சுவாரசியமாக பகிர்ந்திருந்தார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

சரத்குமார் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே நடிகனாக தோன்றவில்லை முதலில் புலன்விசாரணை போன்ற படங்களில் நெகட்டிவ் ரோலில் வந்து தனக்கான முத்திரையை பதித்தவர், சூரியன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழக அரசியலிலும் பங்கெடுத்து மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார்.

நாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று வீம்பு பண்ணாமல் “காஞ்சனா” போன்ற பெண் வேடங்களிலும், குண சித்திர நடிகராகவும்,  தந்தை வேடம் என திரையில் தோன்றி கிடைக்கிற பால்ல சிக்ஸர் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சரத்குமார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் போர்த்தொழில் போன்ற திரைப்படங்கள் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலிலும் வெற்றி பெற்றது.

Also read: LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

கோபிநாத் உடனான நேர்காணலின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உங்களை வைத்து படம் பண்ண திட்டம் போட்டாராமே என்ற கேள்விக்கு, ஒரு சமயம் நானும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடிப்பதாக இருந்தது என்று தொடங்கி, அந்த கதையை சுவாரசியமாக கூறினார் சரத்குமார்.

ரஜினி ஒரு முறை சரத்குமாரை அழைத்து சுப்ரீம் ஸ்டார்! சூப்பர் ஸ்டார்! இருவரும் இணைந்து படம் நடித்தால், நல்லா இருக்கும்ல என்று கூறினாராம் அதற்கு தகுந்தபடி படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சரத்குமாருக்கு விவரித்தாராம்.

சரத்குமார்  நம் நாட்டு தேசிய காவல் அதிகாரி போலவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்டர்நேஷனல் உளவாளியாக நடிப்பது போல கதையை ரெடி பண்ணி சீன் பை சீன் மாஸாக கூறினாராம். இப்படத்தை பாட்ஷா பட புகழ் சுரேஷ்கிருஷ்ணா இயக்குனரை வைத்து இயக்குவதாகவும் தீர்மானம் பண்ணி இருந்தனர்.

பல்வேறு காரணங்களால் கதையுடன் நிறுத்தப்பட்டது இந்த உரையாடல். நடிப்பில் கெத்து காட்டும் ரஜினிக்கு இவ்வளவு திறமைகள் உள்ளது என்பதை சரத்குமாரின் இந்த   நேர்கோணலின் வழியே தெரிகிறது. 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் நடிகர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது என்பதை பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்து  உள்ளனர் நடிகர்கள். அற்புதமான திரைக்கதை! கதையுடன் ஒன்ற வைக்கும் நடிகர்களின் நடிப்பு! அவர்களின் நட்பு  ஆகியவை தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாக இருப்பது நலமே.

Also read: விஜய் உடனான சண்டைக்கு தலைவரே வைத்த முற்றுப்புள்ளி..! ஜல்லிக்கட்டு காளையைப் போல் தளபதி கொம்பை சீவி விட்ட தலைவர்

Trending News