வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சரத்குமார் கையில் இவ்வளவு படங்களா.? எல்லா திசையிலும் பறக்கும் கொடி

80ஸ், 90ஸ் ஹீரோக்கள் பலர் இப்போது தங்களுடைய ரூட்டை மாற்றி நடிக்க தொடங்கிவிட்டனர். அப்படி மாற்றியவர்களால் மட்டுமே இன்றும் சினிமாவில் நீடித்து இருக்க முடிகிறது. மாஸ், க்ளாஸ், ஹீரோயிசம் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாம் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

பிரபு, சத்யராஜ் தான் இதற்கு முன்னோடிகள் என்று சொல்லலாம். கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விடாமல் பயன்படுத்துகின்றனர். நாசரும், பிரகாஷ் ராஜும் கூட இந்த யுத்தியை தான் பயன்படுத்துகின்றனர். இப்போது இவர்கள் இல்லாத படங்களே இல்லை என்றே சொல்லலாம். இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

Also Read: சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

சரத்குமார் 70களின் இறுதியில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ, ஆக்சன் ஹீரோ என தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்டார். இப்போது நிறைய நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சரத்குமாரின் கைவசம் இப்போது மொத்தம் 27 படங்கள் இருக்கின்றன.

பொன்னியின் செல்வன் : இந்திய திரையுலகின் டாப் லிஸ்ட் படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சரத்குமாருக்கு மனைவியாக வருகிறார். சோழர்களுக்கு இணக்கமான பழுவேட்டையர்களில், சரத்குமார் பெரிய பழுவேட்டையராக வருகிறார்.

Also Read: வாய்ப்பு கொடுத்தவரை அடிக்க மறுத்த சரத்குமார்.. 32 வருட ரகசியத்தை உடைத்த சம்பவம்

வாரிசு: இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தில் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா பலரும் நடிக்கின்றனர். வாரிசு படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

ருத்ரன்: ‘5 ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து இயக்கம் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திகில், த்ரில்லர் நிறைந்த இந்த படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார்.

பரம்பொருள்: அரவிந்த் ராஜ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் பரம்பொருள் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதானுடன் இணைந்து சரத்குமார் நடிக்கிறார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

நான்கு வழி சாலை: மலையாள படமான டிராபிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் நான்கு வழி சாலை. இந்த படத்தில் சரத்குமாருடன் இணைந்து சேரன், ரோகினி, நாசர், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.

Also Read: நீ எல்லாம் ஒரு மனுஷனா.? அப்பவே மேடையில் கமலஹாசனை தாக்கிய சரத்குமார்

Trending News