புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அண்ணாமலை கதையை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா.. நீங்க பலே கில்லாடி தான்

அண்ணாமலை படத்துக்கு பிறகு மீண்டும் சுரேஷ்கிருஷ்ணா ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.

annamalai-rajini

ஆனால் சுரேஷ் கிருஷ்ணா ஒரே கதையை வைத்து 2 படங்களை இயக்கியுள்ளார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதாவது ரஜினிகாந்தை வைத்து அண்ணாமலை எனும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தின் கதையை வைத்து சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

அதாவது அண்ணாமலை படத்தின் கதையை வைத்து அப்படியே ஆறுமுகம் எனும் பெயரில் பரத் நடிப்பில் படத்தை இயக்கியுள்ளார். ஒரே கதையை வைத்து 2 படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அண்ணாமலை படத்தில் ரஜினி பால் வியாபாரம் செய்வார். ஆறுமுகம் படத்தில் பாரத்தோ தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்வார். பணக்காரராக வரும் ரம்யா கிருஷ்ணனின் தம்பி பரத்திற்கு நண்பராக வருவார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு பரத்திற்கும் பிரச்சினையாகி ரம்யா கிருஷ்ணன் பரத்தின் வீட்டை இடிக்க செய்வார். பின் சபதம் எடுத்த பரத் பணக்காரனாகி ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலடி கொடுப்பார். அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் கேரக்டரில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துருப்பார்.

அண்ணாமலை படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் ஆறுமுகம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனை கண்டறிந்த ரசிகர்கள் ஒரே கதையை வைத்து சுரேஷ்கிருஷ்ணா 2 படங்களை இயக்கியுள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Trending News