ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாசமலர்கள் படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்குமார் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ஸ்டைலான நடைக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அஜித், ஆரம்ப காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் என உங்களுக்கு தெரியுமா? அது குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

1994 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் பாசமலர்கள் எனும் திரைப்படம் வெளியானது. இதில் நாயகன், நாயகியாக அரவிந்த்சாமி மற்றும் ரேவதி நடித்திருந்தனர். இப்படத்தில் அஜீத் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருப்பார். இந்த ஒரே ஒரு காட்சியில் நடிப்பதற்காக அவர் ரூபாய் 2500 சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த செய்தியை அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ajith kumar
ajith kumar

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதற்கு மாறாக அஜித் குறித்த பழைய செய்திகளும், புகைப்படங்களும் மட்டுமே அஜித் ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.

வலிமை அப்டேட் எப்ப சார் வரும்…..

Trending News