வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எனது பயோபிக்கில் நடிக்க இவரால் மட்டுமே முடியும்.. சுரேஷ் ரெய்னா கூறுபிட்ட தமிழ் நடிகர் யார் தெரியுமா.?

உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களை வைத்து அவர்களின் வாழ்க்கையை படமாக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சுஷாந்த் சிங் நடித்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மேரிகோம், சாய்னா நேவால் என்று விளையாட்டு வீரர்களின் படங்களை வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனால் பல முன்னணி இயக்குனர்கள் இது போன்று படங்கள் எடுக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வந்த ரெய்னா தோனியின் ஓய்வு தெரிவித்த அடுத்த நாளே தன்னுடைய ஓய்வையும் தெரிவித்தார்.

இப்படியிருக்க ஐபிஎல் போட்டியில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சுரேஷ் ரெய்னா.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர்கள் சில கேள்விகளை வைத்தனர். அப்போது உங்களது பயோபிக்கில் யாரை நடிக்க வைத்தால் கரெக்டாக இருக்கும் என்பது போன்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அப்போது தென்னிந்தியாவின் பிரபல நடிகரான சூர்யாவிற்கு எனது கதாபாத்திரம் பொருந்தும் என்றும் அவரால் எளிதாக என்னை போல் நடித்து விட முடியும் என்று பதிலளித்துள்ளார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற சுரேஷ் ரெய்னா எந்த அளவிற்கு சூர்யாவின் நடிப்பை உன்னித்து கவனித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கலந்த சந்தோஷமாக தான் உள்ளது.

suriya-vaadivasal
suriya-vaadivasal

Trending News