Soori – பிரபல காமெடி நடிகராக அசத்தி வந்த சூரி, வெற்றிமாறன் விடுதலை 1 பாகம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின், விடுதலை 2 படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20 ரிலீசாகிறது.
அவர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது. காமெடியனாக இருந்து உழைப்பால் முன்னேறிய சூரி, சினிமாவில் நடிப்பதுடன், மதுரையில் சொந்தமான ஓட்டலும் நடத்தி வருகிறார்.
விடுதலை 2 படத்திற்குப் பின் எந்தப் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் மாமன் படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கவுள்ளார் எனவும், அதில் அவருக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ராஜ்கிரணும் நடிக்கிறார் என தகவல் வெளியாகிறது.
டிசம்பர் 16ல் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டு, காமெடி, காதல் என பக்கா கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது.
படைப்பா, வில்லன் படத்தில் வேலை செய்த சூரி!
சினிமாவில் பிரபலமாவதற்கு முன் ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான படையப்பா படத்தில் சூரி வேலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கிடைக்கும் ரோல்களில் நடிப்பது, சிறிய வேலைகள் செய்வது என சூரி படைப்பா படத்தில் நடிகர்களுக்கு ஃபேன் போடும் வேலையை செய்து வந்ததாக கூறியுள்ளார்.
அதேபோல் அஜித்தின் வில்லன் படத்திலும் சூரி பணியாற்றியுள்ளார். இதைக் கேள்விக்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் ஆச்சர்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.