வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரசிகனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சூர்யா.. நியூ லுக்கில் இணையத்தை தெறிக்க விடும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வந்தனர்.

தற்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிகாட்டு மையப்படுத்தி வாடிவாசல் என்னும் தலைப்பில் படத்தை உருவாக்கி வருகின்றனர். மேலும் பாண்டிராஜ் உடன் ஒரு படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது அவரது ரசிகர்களுக்காக செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

surya
surya

நடிகர் சூர்யா அவரது ரசிகரின் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியது மட்டுமின்றி தனது கையால் தாலியை எடுத்து தன்னுடைய ரசிகருக்கு கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

surya
surya

மேலும் சூர்யாவின் தந்தை சிவகுமார் ரசிகனின் மொபைல் போன் உடைத்தது மற்றும் கார்த்தி ரசிகர்கள் நாகரிகம் இல்லாமல் சில நேரங்களில் நடந்து கொள்வதாகவும் பேசியது போன்ற சூர்யாவின் குடும்பத்தினரின் செயல்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டாலும். தற்போது ரசிகனுக்காக சூர்யா செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

முழு வீடியோ பார்க்க: Click Here

Trending News