வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தாறுமாறாக உருவாகும் சூர்யா 44.. மாஸ் காட்டும் கூட்டணி

Actor Suriya : சூர்யா இப்போது சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களையும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான் கொண்டாடப்பட்டது. ஆனால் இப்போது கங்குவா படம் கண்டிப்பாக சூர்யாவின் கேரியரில் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா படம் இந்த ஆண்டு ரிலீஸாகும் நிலையில் அடுத்ததாக சூர்யா தனது 44வது படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் உடன் இணைந்து ஸ்டோன் பென்ச் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சூர்யா 44 இணைந்த மாஸ் கூட்டணி

சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இவர் பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் பேட்ட போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். முதல் முறையாக சூர்யாவுடன் கூட்டணி போட இருக்கிறார்.

மேலும் சூர்யா 44 படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிய இருக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யாவின் 24 மற்றும் பேட்ட ஆகிய படங்களில் வேலை பார்த்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பெரும்பான்மையான படங்களில் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

இவ்வாறு தாறுமாறான கூட்டணியில் உருவாக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படம் மாஸ் கூட்டணியில் அமைந்துள்ளதால் கண்டிப்பாக தாறுமாறாக இருக்கும்.

Trending News