புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரோலக்ஸை மிஞ்சிய வில்லன் சிரிப்பு.. பிறந்தநாள் பரிசாக வெளியான சூர்யா 44 கிளிம்ஸ் வீடியோ

Suriya 44: சூர்யா இன்று தன்னுடைய 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த சில நாட்களாகவே இதை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வந்த அவரின் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த நாளில் ரசிகர்கள் ரத்ததானம் செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை வருடம் தோறும் செய்து வருகின்றனர். அதில் இந்த வருடம் சூர்யா ரத்த தானம் செய்தது பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதில் கங்குவா முதல் பாடல் இன்று காலை 11 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாஸ் லுக்கில் சூர்யா

ஆனால் அதற்கு முன்பே சூர்யா 44 பட அப்டேட் வெறித்தனமாக வெளிவந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஏற்கனவே இந்த தகவல் வெளிவந்த நிலையில் தற்போது படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கடலுக்கு அருகில் ராயல் எஸ்டேட் என்ற இடம் காட்டப்படுகிறது. அங்கு பலர் டிப்டாப்பான உடையில் நிற்க அசத்தல் என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா.

வாயில் சிகரெட் உடன் முகம் முழுவதும் ரத்தம் தெறிக்க ஸ்டைலாக நடந்து வருகிறார். திடீரென கையில் துப்பாக்கியை லோட் செய்து வில்லத்தனமான ஒரு சிரிப்புடன் துப்பாக்கியை சுடும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அதிலும் அவருடைய ரோலக்ஸ் சிரிப்பை போல் மாசாக இருக்கும் இந்த வில்லத்தனம் ரசிகர்களையும் இம்ப்ரஸ் செய்துள்ளது. ஆக மொத்தம் காதலை முரட்டுத்தனமாக வேறு ஒரு கோணத்தில் தருவதற்கு கார்த்திக் சுப்பராஜ் இப்போது தயாராகி விட்டார்.

சூர்யா 44 கொடுத்த தரமான பிறந்தநாள் பரிசு

Trending News