புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீண்டும் வெற்றிக் கூட்டணியில் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் திரும்பும் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான திரைக்கதை எழுதுவது வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்கரா. அவருடைய முதல் படம் ‘இறுதி சற்று’ படம் பயங்கரமான ஒரு வெற்றியைப் பெற்றது.

சுதா கொங்கரா இரண்டாவது படம் சூரரைப்போற்று, கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இவங்களே எடுக்க இருக்கிறார்களாம.

சுதா கொங்கரா சூர்யாவை வைத்து திரும்பவும் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இப்படம் ‘கேங்க்ஸ்டர்’ திரைப்படமாக அமையப்போகிறது. சூது கவ்வும, காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை செய்து வருகிறார்.

நலன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த படம் தள்ளிப் போனதால், எழுத்தாளராக சுதா கொங்கரா படத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். தியாகராஜா குமாரவேலு தயாரிப்பில் வெப் தொடர்களுக்கான சில எபிசோடுகளை நலன் குமாரசாமி எழுதித் தந்துள்ளார்.

soorarai pottru

சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படம் வெற்றி பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News