தமிழகத்தில் 1990-களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருந்தார். இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜெய் பீம் படம் நவம்பர் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் வந்தாலும் ஜெய்பீம் படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது. ஆனாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.
தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரேனா பரவல் காரணமாக எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. கொரேனா பரவல் குறைந்தவுடன் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் சில காரணங்களால் தற்பொழுது படம் பிப்ரவரி மாதம் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் ஐந்து மொழிகளில் ஓடிடில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தையும் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனால் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியானால் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனால் சூர்யாவின் மார்க்கெட் உயர வாய்ப்புள்ளது.