புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இவர் போலீசா நடிக்கறப்ப நல்லாருந்துச்சா.. சூர்யாவை வெளுத்து வாங்கிய ராதாரவி

சர்க்கார் படத்தின் போது கூட விஜய்க்கு இவ்வளவு பெரிய பிரச்சனையை வரவில்லை. அதையும் மிஞ்சும் அளவுக்கு தற்போது சூர்யாவின் ஜெய் பீம் பட பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறதே தவிர இதற்கு ஒரு முடிவு கிடைத்தபாடில்லை. இன்னமும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமாக்காரர்களுக்கு சினிமாக்காரர்களை சப்போர்ட் செய்யவில்லை என்றால் எப்படி என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார் ராதாரவி. சமீபத்தில் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார்.அங்கு படத்தைப் பற்றி பேசாமல் தேவையில்லாமல் சூர்யாவின் ஜெய்பீம் பிரச்சனையை மறைமுகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

எப்போதுமே சர்ச்சை கருத்துக்கு பெயர் போனவர் ராதாரவி. ஜெய்பீம் படத்தில் போலீஸ்காரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்பது போல காட்டப்பட்டது அறிந்ததே. அதுமட்டுமில்லாமல் வன்னியர் சங்கத்தினரை தாக்கி படம் எடுத்ததாகவும் கூறுகின்றனர்.

இப்படி பல பிரச்சனைகள் இருந்த நிலையில் அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற ராதாரவி நீங்க மட்டும் போலீஸ்காரங்க நல்லவங்களா காட்டி 3 படம் நடிச்சீங்க, அப்போ அவர்களோடு அருமை தெரியலையா. இப்ப நீங்களே போலீஸ்காரங்க கொடூரமாக காட்டுவது நியாயமா.

மேலும் உரிமைக்காக குரல் கொடுப்பது அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் ஒரு சமூகத்தினர் அதை சார்ந்த குறியீடுகள் காட்டுவதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது அப்படி இருக்கும்போது படத்தில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் தெரியாமல் இடம் பெற்றிருந்தாலும் அது தவறுதான் என கூறியிருந்தார்.

மேலும் இருளர் சமூகத்தினரை வன்னியர் சமூகத்தினர் எந்த ஒரு தவறான குரல் கொடுக்கவில்லை. தங்களை தவறாக காட்டியது மட்டும்தான் குறை என கூறி வருகின்றனர் ஆனால் பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டு பல்வேறுவிதமான அரசியல் பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை தன்னுடைய பாணியில் நக்கலும் நையாண்டியும் ஆக கலந்து பேசி உள்ளார் ராதாரவி.  ஆனால் ராதாரவி சூர்யாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பெயரைச் சொல்லாமலேயே மறைமுகமாக இந்த விஷயத்தை பேசினார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதற்கு சமூக வலைதள பக்கத்தில் பலரும் ராதாரவி பேசியது சரியானதுதான் என கூறி வருகின்றனர்

Trending News