சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஜெய்பீம் பிரச்சனையை அன்பே சிவம் படத்திலேயே வெளிப்படையாகச் சொன்ன கமல்.. அப்ப எங்க போனீங்க?

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் வன்னியர் குல சமூகத்தினரை இழிவு படுத்தியதாக ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவு எப்போது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

சூர்யாவும் இதுகுறித்து பெரிய அளவு கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதால் அவர் மீது வன்னியர் சங்கத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். வெளிப்படையாகவே சூர்யாவை தாக்கி பேசியும் வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த பிரச்சனை இருக்கும் நிலையில் சூர்யா தரப்பில் கொஞ்சம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இப்போ சூர்யா பேசியதற்கு இவ்வளவு தூரம் சண்டைக்கு வரும் சமூகத்தினர் கிட்டத்தட்ட 18 வருடத்திற்கு முன்னர் கமல் வெளிப்படையாகவே பேசியதை ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி தான் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அப்படி என்ன சொன்னார் கமல் என்று தானே கேட்கிறீர்கள்.

கமலின் சினிமா கேரியரில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது அன்பே சிவம். இந்த படத்தில் நாசர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது பெயர் அந்த படத்தில் கந்தசாமி படையாட்சி என வெளிப்படையாக வைத்திருப்பார். இதுவும் ஒரு வகையில் வன்னியர் சமூகத்தினரை குறிக்கும் பெயர் தான்.

அதில் தொழிலாளிகளை முதலாளியான நாசர் நசுக்குவது போல் காட்டப்பட்டிருக்கும். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தியேட்டரில் ஓடும் போது இப்படிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வரவில்லை எனவும் சூர்யாவுக்கு மட்டும் இப்படி எதிர்ப்பு வருவது சரி இல்லை எனவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சூர்யா சுமார் 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். இந்த நேரத்தில் கமல் பிரச்சனையையும் உள்ளே இழுத்தால் 5 பிளஸ் 5, 10 கோடி கைக்கு கிடைக்கும் என இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். உண்மையில் என்னதான் பிரச்சனை என்பதை இன்னும் யாருக்கும் தெளிவில்லாமல் இருக்கிறது. காலண்டர்களில் தொடங்கி தற்போது 5 கோடியில் வந்து நிற்கிறது இந்த பிரச்சனை.

- Advertisement -spot_img

Trending News